தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

அனைத்துலக மனித உரிமைகள் நாள்

எல்லா வறுமைக்கும் அடிப்படைக் காரணமாக, தாயாக இருக்கும் போரினால் மிக அடிப்படையான உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

மெரினா ராஜ் – வத்திக்கான்

வாழ்வு மற்றும் அமைதிக்கான மனித உரிமைகள் மற்ற அனைத்து மனித உரிமைகளையும் பயிற்சிப்பதற்கான இன்றியமையாதவைகள் என்றும், எல்லா வறுமைக்கும் அடிப்படைக் காரணமாக, தாயாக இருப்பது போர் என்றும் தனது டுவிட்டர் வலைதளத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 10 செவ்வாய்க்கிழமை அனைத்துலக மனித உரிமைகள் நாளன்று இவ்வாறு தனது கருத்துக்களை டுவிட்டர் குறுஞ்செய்தியாக வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களின் அமைதிக்கான கூக்குரலிற்கு அரசுத்தலைவர்கள் செவிசாய்க்கட்டும் என்றும் அச்செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

வாழ்வுக்கான மற்றும் அமைதிக்கான மனித உரிமைகள் மற்ற அனைத்து உரிமைகளையும் பயிற்சிப்பதற்கான இன்றியமையாதவைகள் என்றும், எல்லா வறுமைக்கும் அடிப்படைக் காரணமாக, தாயாக இருக்கும் போரினால் மிக அடிப்படையான உரிமைகள் பறிக்கப்படுகின்றன. அப்படி உரிமைகள் பறிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களின் அமைதிக்கான கூக்குரலிற்கு அரசுத்தலைவர்கள் செவிசாய்க்கட்டும் என்பதே திருத்தந்தையின் டுவிட்டர் குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 December 2024, 15:29