கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பதே கிறிஸ்து பிறப்பின் அடையாளம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடவுள் நம்மை அன்புகூர்கிறார், நம்முடன் அவர் எப்போதும் இருக்க விரும்புகிறார் என்பதை கிறிஸ்து பிறப்புப் பெருவிழா நமக்கு நினைவூட்டுகிறது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 27, வெள்ளிக்கிழமை இன்று வெளியிட்டுள்ள தனது குறுஞ்செய்தி ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு நம்மை அன்புகூர்வதால் அவர் நமக்காகப் பிறந்தார் என்றும்,. இதுவொரு வியக்கத்தக்க கடவுளின் கொடை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்த வியக்கத்தக்க கொடையுடன் இன்னொன்றும் வருகிறது என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் நம்மீது அன்புகூர்வதுபோல நாமும் ஒருவரை ஒருவர் சகோதரர் சகோதரிகளாக அன்புகூர்ந்திட முடியும் என்பதுதான் கடவுள் நமக்கு வழங்கியுள்ள பெரும்கொடை என்றும், இது நம் ஒவ்வொருவருக்கும் அதிகம் தேவைப்படுகிறது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்