இறைவார்த்தை என்பது தற்காலிகமாக தோன்றி மறையும் உணர்வல்ல
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இறைவார்த்தை என்பது ஒரு புலனாகாத கருத்தாகவோ தற்காலிகமாக தோன்றி மறையும் உணர்வாகவோ ஒரு நாளும் இருக்கமுடியாது என தன் டுவிட்டர் குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவார்த்தையின் மேன்மை மற்றும் முக்கியத்துவம் குறித்து ஜனவரி 28, செவ்வாய்க்கிழமையன்று தன் டுவிட்டர் பக்கத்தில் செய்தியொன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் பார்வையை மாற்றியமைக்கவும், இயேசுவின் இதயச்சாயலில் நம் இதயங்கள் மாற்றப்பட அனுமதியளிக்கவும் விவிலியம் நமக்கு அழைப்புவிடுக்கிறது என அதில் எழுதியுள்ளார்.
இறைவார்த்தை எத்தகையது, அந்த இறைவார்த்தையைத் தாங்கியிருக்கும் விவிலியம் நமக்கு விடுக்கும் அழைப்பு என்பது குறித்து திருத்தந்தையின் செவ்வாய் தின டுவிட்டர் செய்தி எடுத்துரைக்கிறது.
2012ஆம் ஆண்டு திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களால் துவக்கப்பட்ட திருத்தந்தையரின் டுவிட்டர் பக்கத்தில் ஆங்கிலத்தில் இதுவரை 5847 குறுஞ்செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இவைகளை இதுவரை 1 கோடியே 83 இலட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்