கத்தோலிக்கர் வரலாற்றின் கதாநாயகர்களாக செயல்பட
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களின் நீதி மற்றும் அமைதிச் செயலகத்தால் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ள கத்தோலிக்க சமூகப்பணி கூட்டத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில், ஒப்புரவு, ஒன்றிணைத்தல் மற்றும் சகோதரத்துவம் என்பவைகளின் பாலத்தைக் கட்டியெழுப்புபவர்களாகச் செயல்படுமாறு அழைப்புவிடுத்துள்ளார்.
வரலாற்றின் கதாநாயகர்களாக, முன்னோடிகளாக செயல்படவேண்டும் என கத்தோலிக்க சமூகப்பணித் தலைவர்களுக்கு அழைப்புவிடுக்கும் திருத்தந்தை, மறைப்பணியின் மையமாக நம்பிக்கையை கட்டியெழுப்புவது நமக்கு இந்த யூபிலி ஆண்டு தரும் நல்லதொரு சவால் என தன் செய்தியில் கூறியுள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களின் பத்து துறைகள் மற்றும் 20 தேசிய கத்தோலிக்க அமைப்புக்களுடன் இணைந்து ஆயர்களின் நீதி மற்றும் அமைதி அவை ஒவ்வோர் ஆண்டும் இத்தகையக் கூட்டத்தை நடத்திவருகிறது.
இந்த கூட்டம், ஒற்றுமையின் அடையாளமாகவும், ஒப்புரவு, ஒன்றிப்பு மற்றும் உடன்பிறந்த நிலையின் பாலத்தை கட்டுவதாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையையும் தன் செய்தியில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கத்தோலிக்கர்கள் ஒவ்வொருவரும் வரலாற்றின் கதாநாயகர்களாகவும், எதிர்நோக்கின் திருப்பயணிகளாகவும் செயல்படவேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை தன் செய்தியில்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்