திருத்தந்தையின் உடல்நிலையில் தொடர் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி முதல் உரோம் ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல்நிலையில் தற்போது தொடர்ந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்று மார்ச் 18, செவ்வாய்க்கிழமை மாலை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, பகலில் அதிக அளவிளான ஆக்ஸிஜனேற்ற சிகிச்சையும், இரவு ஓய்வின் போது, உடலில் துவாரம் உருவாக்காமல் வாய் வழியாக செயற்கை முறை ஆக்ஸிஜன் வழங்கல் சிகிச்சையும் (non-invasive mechanical ventilation) தற்போது குறைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது திருப்பீடச் செய்தித்துறை.
திருத்தந்தை தன் நாள்களை இறைவேண்டல், ஓய்வு மற்றும் சிறு பணிகளை ஆற்றுவதன் வழி செலவிடுவதாகத் தெரிவிக்கும் அதன் அறிக்கை, அவர் மருத்துவ ரீதியாக பரிந்துரைக்கப்பட்ட உணவை உட்கொள்கிறார் என்றும், அதில் இப்போது திட உணவும் அடங்கும் என்றும் உரைக்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்