தேடுதல்

அணுஆயுத ஏவுகணைகள் அணுஆயுத ஏவுகணைகள்  

மனித சமுதாயத்தின் பாதுகாப்பில் அணு ஆயுதங்களுக்கு இடமில்லை

நாடுகள் மத்தியில் நம்பிக்கையின்மையும், சந்தேகங்களும் அதிகரித்து வருவது குறித்து, அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கவலை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர் முடிவுக்குவர வேண்டும் எனவும், உலக நாடுகள் அணு ஆயுதப் பரவலைத் தடைசெய்யவேண்டும் எனவும், திருப்பீட அறிவியல் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் விண்ணப்பித்துள்ளது.

திருப்பீட அறிவியல் கழகம், அணு ஆயுத அச்சுறுத்தல் குறித்து கடந்த வாரத்தில் நடத்திய பன்னாட்டு கருத்தரங்கத்தில் பங்குபெற்ற பிரதிநிதிகள் அனைவரும் கையெழுத்திட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாடுகள் அணு ஆயுதங்களைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்கவேண்டும், மற்றும், நாடுகளின் அரசியல் சுதந்திரம் மற்றும், ஒருங்கமைவை மதிக்கவேண்டும் என்று விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது இரஷ்யா நடத்திவரும் கொடுமையான போர் மற்றும், ஆயுதத் தாக்குதல்கள், மனித சமுதாயத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை முன்வைத்துள்ளன என்றுரைக்கும் அவ்வறிக்கை, போரிடுவோரால் அணு ஆயுதப் போர் இடம்பெறக்கூடிய வாய்ப்பு குறித்தும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடுகள் மத்தியில் நம்பிக்கையின்மை அதிகம்

உக்ரைனில் இடம்பெற்றுவரும் அறிவற்ற போருக்கு எதிராக தங்களின் கண்டனங்களைத் தெரிவித்துள்ள அப்பிரதிநிதிகள், நாடுகள் மத்தியில் நம்பிக்கையின்மையும், சந்தேகங்களும் அதிகரித்து வருவது குறித்து தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

உலகின் கிழக்கிற்கும், மேற்கிக்கும் இடையே உரையாடல் இடம்பெறவேண்டும் என்று அழைப்புவிடுத்துள்ள அப்பிரதிநிதிகள், உக்ரைனில் வேதிய மற்றும், உயிரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது மற்றும், போர்க்களத்தில், ரோபோக்களும், செயற்கை அறிவியலும் நெறிதவறி பயன்படுத்தப்படுவதற்கு ஆகியவற்றுக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமைதியைக் கொணரும் வழிகளைத் தேடுவதற்கு உலகினர் அனைவருக்கும் இருக்கின்ற கடமையையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 April 2022, 15:23