தேடுதல்

உலக Taekwondo விளையாட்டு கூட்டமைப்பின் தலைவரான கொரியாவின் Chungwon Choue அவர்கள் வத்திக்கானில் 020622 உலக Taekwondo விளையாட்டு கூட்டமைப்பின் தலைவரான கொரியாவின் Chungwon Choue அவர்கள் வத்திக்கானில் 020622 

உலக Taekwondo விளையாட்டு கூட்டமைப்பு, கலாச்சார திருப்பீட அவை

வத்திக்கான் விளையாட்டு வீரர்கள் அமைப்பின் வத்திக்கான் Taekwondo குழு, 2021ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி, உலக Taekwondo விளையாட்டு கூட்டமைப்பின் 211வது அதிகாரப்பூர்வ உறுப்பினராக இணைந்தது

மேரி தெரேசா: வத்திக்கான்

விளையாட்டுகள் உட்பட, பல்வேறு துறைகளில் நிலவுகின்ற மோதல் நடவடிக்கைகளைக் களைவதற்கு உதவுகின்ற சந்திப்புக் கலாச்சாரத்தை ஊக்குவிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும்வண்ணம், உலக Taekwondo விளையாட்டு கூட்டமைப்பின் தலைவரான கொரியாவின் Chungwon Choue அவர்கள் ஜூன் 2, இவ்வியாழனன்று வத்திக்கானில் கலாச்சார திருப்பீட அவையின் உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

Chungwon Choue அவர்கள், கலாச்சார திருப்பீட அவையின் செயலர் ஆயர் Paul Tighe அவர்களைச் சந்தித்து உரையாடியபோது, வத்திக்கான் Taekwondo குழுவின் ஏழு விளையாட்டு வீரர்களும் உடனிருந்தனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வத்திக்கான் விளையாட்டு வீரர்கள் அமைப்பின் வத்திக்கான் Taekwondo குழு, 2021ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி, உலக Taekwondo விளையாட்டு கூட்டமைப்பின் 211வது அதிகாரப்பூர்வ உறுப்பினராக இணைந்தது.

உலக Taekwondo கூட்டமைப்பும், அண்மை ஆண்டுகளாக, வத்திக்கான் விளையாட்டு வீரர்கள் அமைப்போடு நெருங்கிய தொடர்பை வளர்த்துள்ளதோடு, பல்வேறு கலாச்சாரங்களுக்கு இடையே அமைதிக்கான உரையாடலை ஊக்கப்படுத்தவும் தன்னை அர்ப்பணித்துள்ளது.

இவ்வியாழனன்று நடைபெற்ற இச்சந்திப்பில், இளையோர் மற்றும், மிகவும் வலுவற்றவர்களுக்கு விளையாட்டுக்களில் வாய்ப்புகள் வழங்குவது குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டில் வத்திக்கானில், நம்பிக்கை மற்றும், விளையாட்டு என்ற தலைப்பில் நடைபெற்ற உலகளாவிய கருத்தரங்கில், உலக Taekwondo விளையாட்டு முதலில் நடத்திக் காண்பிக்கப்பட்டது. பின்னர், 2017ம் ஆண்டில் உலக Taekwondo கூட்டமைப்பின் தலைவர், இத்தாலிய விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் ஆகிய இருவரும் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து, மிகவும் மதிப்புமிக்க பத்தாவது dan black beltஐ திருத்தந்தைக்கு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 June 2022, 15:39