தேடுதல்

10வது உலக குடும்பங்கள் மாநாட்டுத் திருப்பலி 10வது உலக குடும்பங்கள் மாநாட்டுத் திருப்பலி 

புறக்கணிப்புக் கலாச்சாரத்திற்கு எதிராய் நாம் போராடவேண்டும்

முதியோருடன் திருஅவை உடனிருக்கிறது என்பதை வெளிப்படுத்தும்வண்ணம், தாத்தாக்கள், பாட்டிகள், மற்றும் முதியோர் 2வது உலக நாள் கொண்டாடப்படுகிறது

மேரி தெரேசா: வத்திக்கான்

திருஅவை, முதியோருடன் உடனிருக்கிறது, அவர்கள் மீது அக்கறை கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்தும்வண்ணம், தாத்தாக்கள், பாட்டிகள், மற்றும், முதியோர் இரண்டாவது உலக நாள் கொண்டாடப்படுகிறது என்று, பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் கெவின் ஃபாரெல் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஜூலை மாதச் செபக் கருத்து குறித்து தன் சிந்தனைகளை வழங்கியுள்ள கர்தினால் ஃபாரெல் அவர்கள், புறக்கணிப்புக் கலாச்சாரத்திற்கு எதிராய் நாம் போராடவேண்டியதன் முக்கியத்துவத்தை  வலியுறுத்தியுள்ளதுடன், முதியோர், தங்களின் முதுமைப்பருவத்தை வாழ்வதில் எதிர்கொள்ளும் சவால்கள் பக்கம் இச்செபக் கருத்தில் நம் கவனத்தை திருத்தந்தை திருப்பியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். 

முதுமையில் தனிமை

திருஅவை, மேய்ப்புப்பணி வழியாக, முதியோருடன் உடனிருப்பது குறித்து விளக்கிய, கர்தினால் ஃபாரெல் அவர்கள், சமுதாயம், மற்றும், நம் குழுமங்களின் வாழ்வில் முதியோரின் முக்கியத்துவம் குறித்து நாம் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும் என, திருத்தந்தை அழைப்புவிடுக்கிறார் என்று கூறியுள்ளார்.

உலகில் அண்மை பத்தாண்டுகளில் 65 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவும், இந்நிலையின் பாதிப்பை, தொழில்வளர்ச்சி அடைந்த நாடுகள் அதிகம் எதிர்கொள்கின்றன எனவும், அந்நாடுகளில் முதியோர் மட்டுமே 25 விழுக்காட்டினர் எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஜூலை மாதச் செபக்கருத்தை வெளியிட்ட திருத்தந்தையின் உலகளாவிய செப வலைத்தள அமைப்பு அறிவித்துள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஜூலை மாதச் செபக்கருத்து குறித்த காணொளியை, பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு திருப்பீட அவை மற்றும், ஆல்பெர்த்தோ சோர்தி அமைப்பு ஆகியவற்றின் ஒத்துழைப்போடு தயாரித்து வெளியிட்டுள்ளது, திருத்தந்தையின் உலகளாவிய செப வலைத்தள அமைப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 July 2022, 14:28