தேடுதல்

James Webb  தொலைநோக்கியின் படங்கள் James Webb தொலைநோக்கியின் படங்கள் 

Webb தொலைநோக்கியின் உற்சாகமூட்டும் புதிய படங்கள்

எதிர்கால உலகைப் பற்றி நாம் என்னவெல்லாம் தெரிந்துகொள்ள முடியும் என்பது பற்றிய வியப்பூட்டும் பார்வையைத் தருவது James Webb space telescope

மெரினா ராஜ்: வத்திக்கான்

மிக அருமையாக எல்லாராலும் பார்க்கக்கூடியதாக இருக்கும் தொலைநோக்கியின் படங்கள், எதிர்கால வாழ்வில் நாம் இந்த உலகத்தைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள வழிவகுப்பதாகவும், மனித ஆற்றலின் உணவாகவும் இருக்கும் என்று இயேசு சபை அருள்சகோதர் Guy Consolmagno, அவர்கள் கூறியுள்ளார்.

வானியல் என்னும் ஒரு சிறு துறையில் நம்பமுடியாத இந்த தொலைநோக்குக் கருவியை உருவாக்க உழைத்த அத்தனை பணியாளர்களையும் பாராட்டிய, வத்திக்கானின் வானியல் ஆய்வு மைய இயக்குனரும், இயேசு சபை அருள்சகோதரருமான Guy Consolmagno அவர்கள், மனிதர்கள் ஒன்றிணைந்து செயல்படும்போது உருவாகும் மனித ஆற்றலுக்கு இக்கருவி அர்ப்பணம் என்றும் தெரிவித்துள்ளார்.

‘உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர். மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்’ என்னும் திருப்பாடல் 8ன் வரிகளையும் நினைவுகூர்ந்தார் அருள்சகோதரர் Consolmagno.

இறைவன் இவ்வுலகை எவ்வளவு அழகாக படைத்துள்ளார் என்பதை நாம் காணவும், அவரது வியத்தகு படைப்பாற்றலையும், அன்பின் அழகையும் நோக்கவும் இந்த தொலைநோக்கி வழியாக நமக்கு அளித்துள்ள வாய்ப்பிற்கு நன்றியையும் அருள்சகோதரர் Consolmagno, அவர்கள் தெரிவித்தார் 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 July 2022, 15:07