தேடுதல்

பேராயர் Peña Parra பேராயர் Peña Parra  

“என்னைப் பின்தொடர், பேதுருவின் வாழ்க்கை” காணொளி

கிழக்குத் திமோர் தலைநகர் திலியில் அமைக்கப்பட்டுள்ள, புதிய திருப்பீடத் தூதரகத்தைத் திறந்து வைப்பதற்காக, திருப்பீட செயலகத்தின் பேராயர் Peña Parra அவர்கள் அந்நாட்டிற்குச் சென்றுள்ளார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

“என்னைப் பின்தொடர்: பேதுருவின் வாழ்க்கை” என்ற தலைப்பில் வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலுக்கு முன்புறம் முதல் முறையாக திரையிடப்படும் ஒலி-ஒளிக் காட்சி குறித்து, கர்தினால் மவ்ரோ காம்பெத்தி அவர்கள் தலைமையிலான குழு, செப்டம்பர் 20, இச்செவ்வாயன்று செய்தியாளர் கூட்டத்தில் விளக்கவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

புனித பேதுருவின் வாழ்க்கை குறித்த காணொளிகள், வருகிற அக்டோபர் மாதம் 2ம் தேதி, இத்தாலி நேரம் இரவு 9 மணிக்கு வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலுக்கு முன்புறம் முதல் முறையாகத் திரையிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

வத்திக்கான் நாட்டின் திருத்தந்தையின் பிரதிநிதி கர்தினால் மவ்ரோ காம்பெத்தி, அனைவரும் உடன்பிறந்தோர் அமைப்பின் பொதுச் செயலர் இயேசு சபை அருள்பணி Francesco Occhetta, புனித பேதுரு பெருங்கோவிலின் பங்குத்தந்தை அருள்பணி Agnello Stoia, பேராயர் Calogero La Piana ஆகியோர், இது குறித்து செய்தியாளர் கூட்டத்தில் விளக்குவார்கள்

கிழக்குத் திமோரில் பேராயர் Peña Parra

மேலும், கிழக்குத் திமோர் நாட்டுத் தலைநகர் திலியில் அமைக்கப்பட்டுள்ள, புதிய திருப்பீடத் தூதரகத்தைத் திறந்து வைப்பதற்காக, திருப்பீட செயலகத்தின் பொது விவகாரங்கள் துறையின் பேராயர் Edgar Peña Parra அவர்கள் அந்நாட்டிற்குச் சென்றுள்ளார்.

செப்டம்பர் 19, இத்திங்களன்று, அந்நாட்டு அரசுத்தலைவரும், 1996ஆம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்றவருமான Josè Ramos-Horta அவர்களைச் சந்தித்துள்ள பேராயர் Peña Parra அவர்கள், உலக அமைதிக்கான கிழக்குத் திமோர் மனித உடன்பிறந்த உணர்வுநிலை

மையத்தையும் திறந்து வைத்தார். என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேராயர் Peña Parra அவர்கள், கிழக்குத் திமோரில் செப்டம்பர் 23, வருகிற வெள்ளிவரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளூர் சமுதாயம் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களையும் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 September 2022, 14:48