தேடுதல்

கர்தினால் பியெத்ரோ பரோலின் COP 27 மாநாட்டில் கர்தினால் பியெத்ரோ பரோலின் COP 27 மாநாட்டில் 

புலம்பெயர்தல் என்பது காலநிலை மாற்றத்தால் நிகழ்கிறது : பரோலின்

காலநிலை மாற்றத்தின் சவாலை எதிர்கொள்ள அனைத்துலக மற்றும் தலைமுறைகளுக்கு இடையிலான ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்துகிறது திருப்பீடம் : கர்தினால் பரோலின்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

காலநிலை மாற்றத்தால் அடிக்கடி ஏற்படும் மற்றும் மனிதர்மீதான கடுமையான தாக்கங்களைத் தடுக்கவும் பதிலளிக்கவும் உறுதியுடன் செயல்பட வேண்டிய தார்மீகக் கடமை நம் அனைவருக்கும் உள்ளது என்று திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறியுள்ளார்

காலநிலை மாற்றத்தை மையப்பொருளாகக் கொண்டு நடைபெறும் COP 27 மாநாட்டின் பங்கேற்பாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், இம்மாநாடு மற்றும் பாரிஸ் ஒப்பந்தம் ஆகிய இரண்டிற்கும் ஒரு சிறப்பு அழைப்பாளராகத் திருப்பீடத்தின் பங்கேற்பானது, காலநிலை மாற்றத்தின் சவாலை எதிர்கொள்ள அனைத்துலக மற்றும் தலைமுறைகளுக்கு இடையிலான ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்துகிறது என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர்தல் என்பது காலநிலை மாற்றத்தால் நிகழ்ந்துவரும் ஒரு அறிகுறி என்று கூறியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள்,  இப்பிரச்சனை தீர்க்கப்பட அனைத்து நாடுகளும் உறுதியான தீர்வுகளைக் கண்டறிய வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இதற்குச் சாத்தியமில்லாத சூழ்நிலை ஏற்படுபோது, வழக்கமாக நடைபெறும் புலம்பெயர்தலுக்குச் சரியான பாதைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் விண்ணப்பித்துள்ளார் கர்தினால் பரோலின்.

அனைத்துலக மற்றும் தலைமுறைகளுக்கிடையேயான ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், நமக்காக மட்டுமல்ல, நம் குழந்தைகளைக் கருத்தில் கொண்டு நாம் பொறுப்புடனும் வலிமையுடனும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மனிதகுலத்தின் பொது நலனுக்காகவும், குறிப்பாக, நிகழ்கால மற்றும் எதிர்கால தலைமுறையினரைக் கவனித்துக் கொண்டிருக்கும் நமது இளையோரின் சார்பாகவும், இந்தப் பயணத்தில் ஒன்றிணைந்து முன்னேற அதிகமாக உதவி வரும் திருப்பீடத்தின் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டியுள்ளார் கர்தினால் பரோலின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 November 2022, 14:03