தேடுதல்

Sister Project - Conrad Hilton பிறரன்பு அமைப்பு Sister Project - Conrad Hilton பிறரன்பு அமைப்பு 

Conrad Hilton ஒரு சிறந்த இறைநம்பிக்கையாளர் : Marc Holley

Conrad Hilton பிறரன்பு அமைப்பால், திருப்பீடத் தகவல் தொடர்பு துறையின் அருள்சகோதரிகள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர்: Marc Holley

செல்வராஜ் சூசைமாணிக்கமம் - வத்திக்கான்

Conrad Hilton இறைநம்பிக்கை கொண்டவர் என்றும், அவருடைய தொடக்க நாள்களிலிருந்தே அவர் இறைவேண்டல் செய்துகொண்டே இருந்தார் என்றும், குறிப்பாக, அருள்சகோதரிகளின் பங்களிப்புகளால் அவர் அதிகம் ஈர்க்கப்பட்டார் என்றும் கூறியுள்ளார் Conrad Hilton பிறரன்பு அமைப்பின் துணைத்தலைவர் Marc Holley

மார்ச் 20, 21, திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாள்கள், திருப்பீடச் செய்தித் தொடர்பகத் துறையினரைச் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்த Marc அவர்கள், அருள்சகோதரிகள் அனைவரும் இந்தப் பிறரன்பு அமைப்பின் உதவிகளைப் பெறுவதற்கு முற்றிலும் தகுதியானவர்கள் என்று Conrad Hilton அவர்கள் தான் எழுதிய கடைசி உயிலில் குறிப்பிட்டுள்ளதாகவும் எடுத்துக்காட்டியுள்ளார்.

அருள் சகோதரிகள் அனைவரும் உலகெங்கினும் பல்வேறு சூழல்களில் வாழும் மக்களுக்குப் பணியாற்றுவதுடன், அம்மக்களுடன் உடன் பயணித்து அவர்களுக்கு ஆறுதல் அளிப்பவர்கள் என்றும், அது மட்டுமன்றி, சிறப்பான பயிற்சியளித்து அவர்கள் தங்களின் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக்கொள்ளும் அளவிற்கு அவர்களுக்கு அர்ப்பணமுடன் பணியாற்றக் கூடியவர்கள் என்றும் Conrad Hilton கொண்டிருந்த எண்ணம் குறித்தும் விவரித்துள்ளார் Marc

இப்பிறரன்பு அமைப்பில்  பெண்கள் மதம் சார்ந்து முதலீடு செய்யும் நான்கு வெவ்வேறு அடிப்படையான வழிகள் உள்ளன என்று விளக்கிய Marc, முதல் பகுதி முறையான கல்வி மற்றும் அருள்சகோதரிகளை உருவாக்குதல் என்றும், இந்த முதலீடுகள் சபைகளின் நிலைத்தன்மை மற்றும் வயது முதிர்ந்த அருள்சகோதரிகளைப் பராமரிப்பதில் உள்ள முதலீடுகளுடன் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

இவ்வமைப்பு, குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு அருள்சகோதரிகளால் நிறைவேற்றப்படும் பணிகளிலும் முதலீடு செய்கிறது என்றும், இது ஒரு ஒரு புதிய முதலீட்டுப் பகுதி என்று என்றும் சுட்டிக்காட்டிய Marc, இதன் வழியாக மனித கடத்தலைத் தடுத்து, ஆபத்துக் காலங்களில் உயிர் பிழைத்தவர்களை மீட்கவும், அவர்களுக்கு வளமையான வாழ்க்கையை உருவாக்கவும் உதவுகிறது என்றும், குரலற்றோருக்கு குரல் கொடுக்கும் விதமாக அருள்சகோதரிகளை வழக்கறிஞர்களாக உருவாக்குவதையும் இது நோக்கமாக கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இப்பிறரன்பு அமைப்பால் திருப்பீடத் தகவல் தொடர்பு துறையின் அருள்சகோதரிகள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர் என்றும், இவ்வமைப்பிலிருந்து பெறும் உதவியின் காரணமாக இத்துறை Pentecost Project திட்டத்தை உருவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்  Marc.

1986-ஆம் ஆண்டு முதல், Conrad Hilton அமைப்பு, கத்தோலிக்க அருள்சகோதரிகளின் பிறரன்பு பணிகளுக்கு  ஏறத்தாழ $67,300,000 (இந்திய மதிப்பில் 5,562,580,550.00) வழங்கியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 March 2023, 13:55