தேடுதல்

பெருங்கோவிலுக்குள் செல்ல வரிசையில் நிற்கும் திருப்பயணிகள் (கோப்புப்படம் 2022) பெருங்கோவிலுக்குள் செல்ல வரிசையில் நிற்கும் திருப்பயணிகள் (கோப்புப்படம் 2022)  (AFP or licensors)

தூய பேதுரு பெருங்கோவிலுக்குள் செல்ல புதிய வழி

ஒவ்வொரு நாளும் காலை 6.50 மணி முதல் மாலை 6.40 மணி வரை அனுமதிக்கப்படும் இப்பாதைக்கும் நுழைவுச் சீட்டு தேவையில்லை

மெரினா ராஜ் - வத்திக்கான்

தூய பேதுரு பெருங்கோவிலுக்குள் சென்று செபிக்கவும்,  திருப்பலி மற்றும் பிற அருளடையாளங்களைப் பெறவும் திருப்பயணிகளுக்கென ஒரு புதிய பாதையை ஏற்படுத்தியுள்ளது தூய பேதுரு பெருங்கோவில் பாதுகாப்பு மற்றும் பரமாரிப்பிற்கான வத்திக்கான் நிறுவனமான "Fabbrica di San Pietro" அமைப்பு.

மார்ச் 28, செவ்வாய்க்கிழமையன்று, ஆரம்பிக்கப்பட்ட இப்புதிய வழிமுறையானது, வத்திக்கானிற்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்பிற்கான இத்தாலியக் காவல் துறை, வத்திக்கான் நகருக்கான நிர்வாக அலுவலகம், மற்றும் வத்திக்கான் காவல்துறை ஆகியோரால் இணைந்து உருவாக்கப்பட்டது.

வத்திக்கான் பெருங்கோவிலின் வலப்புறம் வழியாக ஆரம்பிக்கும் இப்பாதையானது,  திருப்பயணிகள் ஆன்மிக மற்றும் வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் விதமாகத் தூய வியாகுல அன்னை திருஉருவம் உள்ள பலிபீடத்தில் தொடங்கி, திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் திருப்பலிபீடம், அருளடையாளங்களுக்கான பலிபீடம், கிரகோரியன் பலிபீடம், ஒப்புரவு அருளடையாளத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடம்,  தூய யோசேப்பு சிற்றாலயம் வரை முடிவுறுகிறது.

ஒவ்வொரு நாளும் காலை 6.50 மணி முதல் மாலை 6.40 மணி வரை அனுமதிக்கப்படும் இப்பாதைக்கும் நுழைவுச்சீட்டுத் தேவையில்லை எனவும், "சுற்றுலா பயணிகளுக்கான பாதையானது பெருங்கோவிலுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வழிபாட்டு நிகழ்வுகளில் மக்களின் பங்கேற்பை வளர்க்கவும், உதவுவதாக உள்ளது என்றும் அறிவித்துள்ளார் கர்தினால் Mauro Gambetti.

"உண்மையாக செபிக்க விரும்பும் மக்கள் மற்றும் திருப்பயணிகள் பெருங்கோவிலுக்கு வருவதை அதிகப்படுத்தவும், வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கவும், திருதந்தையின் விருப்பத்திற்கு இணங்க, ஆன்மிக, வழிபாட்டுக் கொண்டாட்ட வாழ்க்கைக்கான அதிகபட்ச அணுகலை மீட்டெடுக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார் கர்தினால் Gambetti.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 March 2023, 12:49