ஜெர்மன் நாட்டு கர்தினால் Karl-Josef Rauber இறைபதம் சேர்ந்தார்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
1934ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்து பல்வேறு நாடுகளில் திருப்பீடத்தூதராக பணியாற்றியுள்ள ஜெர்மன் நாட்டு கர்தினால் Karl-Josef Rauber அவர்கள், மார்ச் 26 ஞாயிறு மாலை இறைபதம் சேர்ந்தார்.
ஜெர்மனியின் Mainz மறைமாவட்டத்தின் அருள்பணியாளராக 1959ஆம் ஆண்டு திருனிலைப்படுத்தப்பட்ட இவர், உகாண்டா, சுவிட்சர்லாந்து, Liechtenstein, ஹங்கேரி, மொல்தோவா, பெல்ஜியம், லக்சம்பர்க், ஆகியவைகளுக்கான திருப்பீடத்தூதராகச் செயல்பட்ட பின்னர், 2015ஆம் ஆண்டு அவரின் 80ஆம் வயதிற்குப் பின்னரே கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.
88 வயதான கர்தினால் Karl-Josef Rauber அவர்கள் மார்ச் 26ஆம் தேதி ஜெர்மனியில் இறைபதம் சேர்ந்தார்.
இவரின் மரணத்துடன், திருஅவையில் கர்தினால்களின் எண்ணிக்கை 222 ஆக உள்ளது. இதில் 99 பேர் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், 123 பேர் 80 வயதிற்கு உட்பட்டவர்கள், அதாவது, திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் தேர்வில் பங்குபெறும் தகுதியுடையவர்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்