தேடுதல்

திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்   (ANSA)

திருஅவை கலை மற்றும் கலாச்சாரத்தைக் பாதுகாக்கிறது

புனித கலையை ஊக்குவிப்பதிலும் அதனைப் பாதுகாப்பதிலும் திருஅவையின் முழு அர்ப்பணிப்பு முதன்மையானதும் முக்கியமானதுமாக இருந்துள்ளது : கர்தினால் பியெத்ரோ பரோலின்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கலைஞர்கள், திருஅவையின் தெய்வீகச் செய்தியை வடிவங்கள் மற்றும் உருவங்களின் மொழியில் மொழிபெயர்க்க உதவியது என்றும், கண்ணுக்குத் தெரியாத உலகத்தை தெளிவாக்கும் அதேவேளையில், வழிபாட்டுக் கலையில் எப்போதும் இயற்கையான நட்பை வெளிப்படுத்துகிறது என்று கூறினார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்

மால்டாவில் உள்ள புனித ஜான் இணைப்பேராலயத்தில் மே 11, 12 அதாவது, வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்று வரும் மாநாட்டில், ஐரோப்பிய பேராலயங்கள் மால்டா 2023. "பாதுகாப்புக்கும் ஆன்மிகத்திற்கும் இடையிலான சமநிலை" என்ற தலைப்பில் உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார் கர்தினால் பரோலின்.

மைக்கேலாஞ்சலோ மற்றும் காண்டின்ஸ்கியை மேற்கோள் காட்டி, கலைஞர்கள் எப்போதுமே கலையைப் பற்றிய புனிதம், "உள் தேவை", "ஆன்மீக உந்துதல்", மனிதனின் "ஆன்மிக பசி" ஆகியவற்றின் பிரதிபலிப்பில் எவ்வாறு பேசுகிறார்கள் என்பதை வலியுறுத்திய கர்தினால் பரோலின் அவர்கள், கிறிஸ்தவர்கள் அல்லாதவை உட்பட அனைத்து முக்கிய ஆன்மிக இயக்கங்களும் பல நூற்றாண்டுகளாக கலையில் பெரும் செல்வாக்கை செலுத்தியுள்ளன என்றும் அவர் நினைவு கூர்ந்தார்.

இதன்காரணமாக, மதிப்பு அடிப்படையிலான பாதுகாப்பு அறிவியல் அதன் இயல்பிலேயே ஆன்மிகத்தின் ஒரு வடிவம் என்று கூறுவது மிகையாகாது, ஏனென்றால், இது நமது கலாச்சார பாரம்பரியத்தின் உறுதியான மற்றும் அருவமான பரிமாணங்களுக்குக் காரணமான மதிப்புகளை காலப்போக்கில் விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று விளக்கிய கர்தினால் பரோலின் அவர்கள், இவ்விதத்தில், இந்தப் புனித கலையை ஊக்குவிப்பதிலும் அதனைப் பாதுகாப்பதிலும் திருஅவையின் முழு அர்ப்பணிப்பு முதன்மையானதும் முக்கியமானதுமாக இருந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 May 2023, 15:01