தேடுதல்

ஆயர் மாமன்றம் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஆயர் மாமன்றம் பத்திரிக்கையாளர் சந்திப்பு 

ஆயர் மாமன்றத்தில் புலம்பெயர்ந்தோர், அகதிகளுக்கு முக்கியத்துவம்

ஆயர் மாமன்றத்தில் வாதங்கள் அனைத்திலும் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்

ஆயர் மாமன்றத்தின் பதின்மூன்றாவது பொது அவையின் முடிவில், ஆயர் மாநாட்டில் பங்கேற்பாளர்கள் அனைவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் மாலை வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில், அறியப்படாத காவல் தூதர்கள் நினைவுச்சின்னத்திற்கு அருகில், புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளுக்காகவும், தங்களது பயணத்தில் உயிரை இழந்தவர்களுக்காகவும் செபிக்க கூடினார்கள்.

வியாழன் அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, தகவல் தொடர்புக்கான துறையின் தலைவர் முனைவர் பவுலோ ருபினி அவர்கள், புதன் பிற்பகல் மற்றும் வியாழன் காலை நடந்த நிகழ்வுகள் குறித்து விளக்கிக் கூறினார்.

35 சிறிய குழுக்கள் பொதுவான கருப்பொருளின் வெவ்வேறு அம்சங்கள், பங்கேற்பு, பொறுப்பு மற்றும் அதிகாரம், ஒரு மறைபோதக ஒருங்கிணைந்த திருஅவையின் செயல்முறைகள், கட்டமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் பற்றி விவாதித்தாக கூறினார். மேலும், புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் பற்றி கர்தினால் மைக்கேல் செர்னி, ஆயர் டேனியல் எர்னஸ்ட் புளோரஸ், பேராயர் டபுலா அந்தோனி ம்பாகோ ஆகியோர் தங்கள் பங்களிப்பை பகிர்ந்தனர்.

அதுமட்டுமின்றி, கர்தினால் ஜீன்-கிளாட் ஹோலெரிச் அறிவித்தது போன்று நிபுணத்துவம் வாய்ந்த இறையியலாளர்கள் மற்றும் நியதியாளர்களின் மூன்று பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, அவை மூன்று அறிக்கைகளில்,  ஒரு மறைபோதக ஒருங்கிணைந்த திருஅவையை ஒருங்கிணைக்க கட்டமைப்புகளை உருவாக்குவது, ஒருங்கிணைந்த பயணம் மற்றும் கூட்டு நிகழ்வுகளை உள்ளூர் திருஅவைகளில் எவ்வாறு கட்டமைத்தல் மற்றும்,  ஆயர் சபையை எவ்வாறு பலப்படுத்தலாம் என்பது குறித்து பொதுச் சபைகளுடன் பகிர்ந்து கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்,

ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான துறையின் தலைவர் கர்தினால் மைக்கேல் செர்னி அவர்கள் அறியப்படாத காவல் தூதர்கள் நினைவுச்சின்னம் பற்றி கூறுகையில், கப்பலால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் இடம்பெயர்வு நிகழ்வு. திமோதி ஷ்மால்ஸால் வெண்கலத்தில் செதுக்கப்பட்டது, இது எல்லா வயதினரையும் மற்றும் எல்லா இடங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அவர்கள் ஏதோ ஒரு வழியில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், "நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ணம் மற்றும் ஓருங்கிணைந்த பயணத்தில் நாம் அனுபவிக்கும் ஆழமான பரிமாற்றம் மற்றும் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளின் கவலை, பாதுகாப்பின்மை, பாதிப்பு, ஓரங்கட்டப்படுதல் ஆகியவற்றுக்கு இடையேயான வியத்தகு வேறுபாடுள்ளதாக கர்தினால் செர்னி குறிப்பிட்டுள்ளார்.

மெக்சிகோவின் எல்லையில் உள்ள டெக்சாஸின் பிரவுன்ஸ்வில்லியின் ஆயர் டேனியல் எர்னஸ்ட் புளோரஸ், உலகில் உள்ள ஒவ்வொரு மறைமாவட்டமும் உள்ளூர் திருஅவையின் பரிசுகளையும் விதமான அனுபவங்களையும் ஆயர் மாமன்றத்திற்கு கொண்டு வருவதாக  என்று கூறினார்.

சமீபத்திய ஆண்டுகளில் இலத்தீன் அமெரிக்காவிலிருந்து பிரவுன்ஸ்வில்லி வழியாக அமெரிக்காவிற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், தனது மறைமாவட்டத்தின் மக்கள், உணவக உரிமையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளைப் பராமரிப்பதற்காகத் தங்கள் நேரத்தைத் தன்னார்வமாகப் பணியாளர்கள் செலவிடுவதாகவும்,  அதே நேரத்தில் பிற கிறிஸ்தவ பிரிவுகள், முஸ்லிம்கள் மற்றும் யூதர்கள் உட்பட பிற சமூகங்களின் உறுப்பினர்களும் முக்கியத்துவம் பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆயர் புளோரஸ் தனது மறைமாவட்டத்தில் பெரிய பொருளாதார வளங்கள் இல்லை ஆனால் மக்களின் இதயங்கள் மிகவும் தாராளமானவை, புலம்பெயர்ந்த குடும்பங்களின் மனித கண்ணியத்தை மதிக்கவும், மிகுந்த மரியாதையுடன் நடத்தவும் முயற்சிக்கும் வகையில்  மாற்றியமைப்பதாகவும் விளக்கியுள்ளார்,

பிரிட்டோரியாவின் பேராயர் மற்றும் தென்னாப்பிரிக்க ஆயர்கள் பேரவையின் துணைத் தலைவருமான பேராயர் டபுலா அந்தோனி ம்பாகோ, ஓருங்கிணைந்த பயணத்தின் செயல்முறையாக ஆவியில் உரையாடலில் பங்கேற்கும் வாய்ப்பிற்கான தனது பாராட்டுக்களைக் குறிப்பிட்டு, செவிசாய்த்தல், மரியாதை மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் மூலம், மக்கள் ஒருவரையொருவர் உண்மையாக வெளிப்படுத்தவும் வரவேற்கவும் முடியும் என்று கூறியுள்ளார். அதே நேரத்தில், இந்த ஓருங்கிணைந்த செயல்முறைக்கு ஏற்ற வளமான நிலம் பல ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்கெனவே உள்ளது என்பதை உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு ஆயர் பராமரிப்பை வழங்க வேண்டிய சவாலை எதிர்கொள்கிறது  என்றும், 2.9 மில்லியனுக்கும் அதிகமான அகதிகளை வரவேற்றிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவிற்கு வரும் பெரும்பாலான புலம்பெயர்ந்தோர் வறுமையின் காரணமாக புலம்பெயர்ந்தோர் என்றும், தனது சொந்த நகரமான பிரிட்டோரியா  புலம்பெயர்ந்தோருக்கான மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றாகும் என்ற பேராயர் ம்பாகோ, புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கான பராமரிப்புக்காக நன்கு நிறுவப்பட்ட மறைமாவட்டப் பணியகம் உள்ளது என்றும், அது உணவு வழங்குவது, ஆடை, நலவாழ்வு, மற்றும் தேவையான ஆவணங்களைப் பெற உதவுதல் என பணிகளைசெய்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

மற்றும் கத்தோலிக்க புலம்பெயர்ந்தோரின் தேவைகளை ஒருங்கிணைக்க, அதாவது அவர்களின் சொந்த மொழிகளில் வழிபாடுகளை வழங்குதல், மற்றும் அவர்களிடமிருந்தே அருள்பணியாளர்களை நியமித்தல் போன்ற பராமரிப்பையும் வழங்குகிறது என்று தனது நாட்டில் குடியேறியவர்கள் மற்றும் அகதிகளின் நிலைமையை விளக்கியுள்ளார் பேராயர் எம்பாகோ.

மேலும், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஆயர் ப்ளோரஸ் மற்றும் பேராயர் எம்பாகோ நிருபர்களிடம், ஆயர் மாமன்றத்தின் பிரதிபலிப்பு வெளிப்புற அழுத்தங்கள் அல்லது சதிகளால் பாதிக்கப்படவில்லை என்று உறுதியளித்துள்ளதுடன், பேதுருவின் கவனிப்பில் நேர்மையான, உண்மையுள்ள, தொண்டு உரையாடல்களை கேட்டிருப்பதாகவும். அது நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் அல்ல என்றும் கூறியுள்ளார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 October 2023, 16:11