தேடுதல்

ஆயர் மாமன்றத்தில் திருத்தந்தை ஆயர் மாமன்றத்தில் திருத்தந்தை  (ANSA)

ஆயர் மாமன்றத்தில் தேர்வு உறுப்பினர்களின் விவரம்

தொகுப்பு அறிக்கைக்கை மற்றும் தகவல் ஆணையத்தின் உறுப்பினர்களுக்கான ஆயர் மாமன்ற வாக்கெடுப்பின் முடிவு வெளியானது.

திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்

2023 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி திங்கட்கிழமையன்று நடைபெற்ற ஆயர் மாமன்ற நடவடிக்கைகளின் பிற்பகல் அமர்வில், தொகுப்பு அறிக்கைக்கான ஆணைய உறுப்பினர்களின் தேர்தல் மற்றும் தகவல் ஆணையத்தின் உறுப்பினர்களுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.

தொகுப்பு அறிக்கைக்கான ஆணையம், குறிப்பெடுக்கும் பணி மட்டுமல்லாமல், தொகுப்பு அறிக்கையின் வரைவைத் தயாரிப்பதை மேற்பார்வை செய்தல், திருத்துதல் மற்றும் ஒப்புதல் அளித்தல் ஆகிய செயல்பாடுகளை மேற்கொள்ளும் என்றும், தகவல் ஆணைக்குழு, தகவல்தொடர்பு துறைக்கான பணியாளர்களுடன் தகவல் தொடர்புகளை கவனித்து ஆணையத்திற்கு உதவும் என்றும் அச்செய்தி குறிப்பிட்டுள்ளது.

மேலும், தேர்தல்கள் ஒழுங்குமுறைகளில் சுட்டிக்காட்டப்பட்ட நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளின்படி நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

தொகுப்பு அறிக்கை ஆணையமானது, தலைவர் கார்டினல் ஜன்-கிளாட் ஹோலெரிச், இரு அதிகாரப்பூர்வ உறுப்பினர்களாக ஆயர் பேரவையின் தலைமைச் செயலகத்தின் இருவர், மலேசியாவைச் சேர்ந்த அருள்பணி கிளாரன்ஸ் சந்தனராஜ் தேவதாசன் உட்பட ஆயர்மன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு உறுப்பினர்கள், மற்றும் திருதந்தையால் நியமிக்கப்பட்ட மூவரை உள்ளடக்கியதாகும்.

தகவல்தொடர்பு ஆணையத்தின் தலைவராக திருதந்தையால் நியமிக்கப்பட் முனைவர் பவுலோ ருபினி, செயலாளர் முனைவர் ஷீலா லியோகாடியா பைரெஸ், எட்டு அதிகாரபூர்வ உறுப்பினர்கள்,  மற்றும் ஆயர்மன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களில் பிலிப்பைன்ஸ் நாட்டு ஆயர் பாப்லோ விர்ஜிலியோ டேவிட் அவர்களும் உள்ளடங்கும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 October 2023, 15:44