உலக காரித்தாஸ் அமைப்பு மற்ற அமைப்புகளுடன் ஜெனீவாவில் ஒரு நாள்
திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்
2023ஆம் ஆண்டு டிசம்பர் 13-15 ஆகிய நாட்களில் இடம்பெற இருக்கும் உலகளாவிய அகதிகள் மன்றத்திற்க்கு முன்னதாக, இத்தாலியில் உள்ள நற்செய்தி அறிவிப்பு அமைப்புக்களின் கூட்டமைப்பு, சர்வதேச கத்தோலிக்க இடம்பெயர்வு ஆணையம் ஐரோப்பா (ICMC) ஆகியவற்றுடன் இணைந்து உலக காரித்தாஸ் அமைப்பு, ஜெனீவாவில் ‘ஐரோப்பாவிற்கு இணைப்பு பாதைகள்: மனிதாபிமானம், தொழிலாளர் மற்றும் கல்வி வழித்தடங்கள்’ என்ற தலைப்பில் ஒரு நிகழ்வினை நடத்தியது.
மக்கள் தாங்கள் தஞ்சம் புகுந்த நாடுகளில் கடினமான சூழ்நிலைகளில் வாய்ப்புகளை உருவாக்குவதில், மனித நேயம் மற்றும் கல்வி வழித்தடங்கள் வெற்றிகரமான அனுபவங்களாக திகழ்கின்றன என்றும், தனியார் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களின் ஆதரவால் ஆயிரக்கணக்கான மக்களின் புதிய வாழ்க்கைக்கு வாய்ப்பளித்துள்ளது என்றும் உலக காரிதாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
‘ஐரோப்பாவிற்கு இணைப்பு பாதைகள்: மனிதாபிமானம், தொழிலாளர் மற்றும் கல்வி வழித்தடங்கள்’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்நிகழ்வு மக்களின் தனித்துவமான பங்களிப்புகள், அனுபவங்கள் மற்றும் பயணக்குறிப்புக்களை உள்ளடக்கிய உரையாடலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என இவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்