தேடுதல்

திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்  

மனிதாபிமான சட்ட விதிகளை மதிக்க வேண்டும் : கர்தினால் பரோலின்

மனிதாபிமான சட்டத்தின் அடிப்படை விதிகளை மதிக்காத போரானது, பொதுமக்களை இலக்குகளாகவும் தங்கள் நோக்கங்களாகவும் கொண்டு நடைபெற்று வருகின்றது

மெரினா ராஜ் - வத்திக்கான்

போர் என்பது பன்னாட்டு நடவடிக்கைக்கான சட்டபூர்வமான கருவி அல்ல என்றும்,  நாடுகள் அனைத்தும் பன்னாட்டு மனிதாபிமான சட்டவிதிகளை மதித்து நடக்க வேண்டும் என்றும் கூறினார் கர்தினால் பியத்ரோ பரோலின்.

சனவரி 12 வெள்ளிக்கிழமை உரோமில் உள்ள Lincei அகாடமியில் நடைபெற்ற அமைதிக்கான கூட்டத்தில், புனித பூமி, உக்ரைன், திருஅவை பற்றிய செய்திகள் குறித்த தனது கருத்துக்களை எடுத்துரைத்தபோது இவ்வாறு கூறினார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்.

பிணையக்கைதிகளை விடுவித்தல், மனிதாபிமான உதவிகளுக்கு வழியமைத்தல் போன்றவை போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் மற்றும் பாலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என்று எடுத்துரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், மனிதாபிமான சட்டத்தை மதிக்கத் தவறியதே, இன்றைய போரில் அனுபவிக்கும் பெரிய பிரச்சனை என்றும் கூறினார்.

மனிதாபிமான சட்டத்தின் அடிப்படை விதிகளை மதிக்காத போரானது, பொதுமக்களை இலக்குகளாகவும் தங்கள் நோக்கங்களாகவும் கொண்டு நடைபெற்று வருகின்றது என்றும், பன்னாட்டு மனிதாபிமான சட்டத்தை மீண்டும் கண்டுபிடிக்கும் திறன் நமக்கு இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் கர்தினால் பரோலின்.

“Gutta cavat lapidem” அதாவது எரும்பு ஊறக் கல்லும் தேயும் என்று பொருள்படும் இலத்தீன் வார்த்தைகளை மேற்கோள்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், உக்ரைன் மற்றும் காசாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் "படுகொலைகளை சுட்டிக்காட்டி, பன்னாட்டு மனிதாபிமானச் சட்டத்திற்கு மதிப்பளித்து திருத்தந்தையின் தொடர்ச்சியான போர்நிறுத்தத்திற்கான வேண்டுகோள்கள் நல்ல முடிவை ஏற்படுத்தும் என்ற தன் நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 January 2024, 11:18