தேடுதல்

2023 உலக இளையோர் தின விழாவில் அருள்பணியாளர்கள் 2023 உலக இளையோர் தின விழாவில் அருள்பணியாளர்கள்  (ANSA)

உரோமில் உலக அருள்பணியாளர்களுக்கான 5 நாள் கூட்டம்

"உங்களுள் இருக்கும் இறைவனின் கொடையை தூண்டிவிடுங்கள்" என்ற தலைப்பில் உரோம் நகரில் உலக அருள்பணியாளர்களுக்கு பயிற்சி முகாம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அருள்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து அவர்களுக்கு பயிற்சி வழங்கும் 5 நாள் கூட்டம் உரோம் நகரில் இச்செவ்வாய்க்கிழமை துவங்கியது.

இறைவேண்டல், அறிக்கை சமர்ப்பித்தல், சிறு குழுக்களாக கருத்துக்களைப் பகிர்தல் என பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய இந்த உரோம் கூட்டம் பிப்ரவரி 6 முதல் 10 வரை ஐந்து நாட்களுக்கு உரோம் நகரில் இடம்பெறுகிறது.   

அருள்பணியாளர்களுக்கான திருப்பீடத்துறை, நற்செய்தி அறிவிப்புக்கான துறை, கீழைவழிபாட்டுமுறை திருஅவைகளுக்கான துறை ஆகியவைகளால், "உங்களுள் இருக்கும் இறைவனின் கொடையை தூண்டிவிடுங்கள்" என்ற தலைப்பில் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ள இந்த பயிற்சி முகாமில் 60 நாடுகளிலிருந்து ஏறக்குறைய ஆயிரம் பேர் கலந்துகொள்கின்றனர்.

இப்பயிற்சி முகாமை துவக்கிவைத்து உரையாற்றிய அருள்பணியாளர்களுக்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் Lazarus You Heung-sik அவர்கள், தான் இத்துறையின் தலைவராக பொறுப்பேற்ற நாள் முதல், அருள்பணியாளர்கள் தங்கள் பணியில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

இதே பயிற்சி கருத்தரங்கில் உரையாற்றிய நற்செய்தி அறிவிப்புக்கான திருப்பீடத்துறையின் தலைவர், கர்தினால் அந்தோனியோ தாக்லே அவர்கள், ஒவ்வொரு அருள்பணியாளரும் தங்கள் கலாச்சாரத்தை புகழ்வதோடு, ஏனைய கலாச்சாரங்களின் நல்ல கூறுகளைப் பாராட்ட எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 February 2024, 14:38