தேடுதல்

WUCWO ஒன்றியத்தின் தலைவர் Mónica Santamarina, WUCWO ஒன்றியத்தின் தலைவர் Mónica Santamarina, 

WUCWO ஒன்றியம் நடத்தும் நிகழ்நிலை சந்திப்பு

உலக கத்தோலிக்கப் பெண்கள் அமைப்புகளின் ஒன்றியத்தின் (WUCWO) தலைவர் Mónica Santamarina, உலக ஆயர்கள் மாமன்றத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்நிலை சந்திப்புக் குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உலக கத்தோலிக்கப் பெண்கள் அமைப்புகளின் ஒன்றியத்திற்கு (WUCWO) திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மிகுந்தளவில் தனது ஆதரவை வழங்கி வருகின்றார் என்று கூறியுள்ளார் அதன் தலைவர் Mónica Santamarina.

வரும் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி, இவ்வமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இணையதளவழி (zoom) உரையாடல் குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு உரைத்துள்ள Santamarina அவர்கள், இச்சந்திப்பு திருஅவையில் பெண்கள் தங்களின் பங்களிப்பை இன்னும் வலுப்படுபடுத்திக்கொள்ள உதவக்கூடியதாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

'தூய ஆவியில் உரையாடல்கள்' என்ற தலைப்பில் இந்த இணையதளவழி உரையாடல் நிகழவிருப்பதாகவும், இந்த முன்மொழிவு ஒருங்கிணைந்த பயணக் கற்றலின் (School of Synodality) ஒரு பகுதிதான் என்றும் இந்த நேர்காணலில் எடுத்துக்காட்டியுள்ள Santamarina அவர்கள், இந்தத் திட்டத்தின் வழியாகப் பல பெண்கள் ஐந்து கண்டங்களில் பயிற்சி பெறுகின்றனர் என்று உரைத்துள்ளார்.

இக்கூட்டத்தில் ஒவ்வொரு பங்கேற்பாளரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், மற்ற அனுபவங்களையும் கண்ணோட்டஙகளையும் கேட்கவும் உதவும் விதமாக, இவ்வுரையாடல் ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் பிரஞ்சு மொழிகளில் சிறிய குழுக்களையும் கொண்டிருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் Santamarina

எங்களின் ஒன்றியத்திற்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து தனது ஆதரவை வழங்கி வருகின்றார் என்று தெரிவித்த Santamarina அவர்கள், எங்களின் இந்த இணையதளவழி உரையாடல் நிகழ்வை அவர் மிகவும் விரும்பினார் என்றும், கடந்த ஆண்டு எங்களை சந்தித்தபோது, சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களைச் சென்றடையும் வகையில் தொடர்ந்து பணியாற்றுமாறு அவர் எங்களை ஊக்குவித்தார் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 April 2024, 15:23