குரொவேசியாவில் பேராயர் காலகரின் 3 நாள் பயணம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
குரொவேசிய தலைநகர் Zagrebன் பாதுகாவலியான Stone Gate நமதன்னை திருவிழாவையொட்டி குரொவேசியாவில் பயணம் மேற்கொண்டுவருகிறார் திருப்பீட வெளியுறவுத்துறைச் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.
மே மாதம் 30ஆம் தேதி துவங்கிய இந்த 3 நாள் பயணத்தின்போது, Stone Gate நமதன்னை பேராலயத் திருவிழாவில் கலந்துகொள்வதோடு, அரசு அதிகாரத்தில் இருப்போரையும் சந்தித்து கலந்துரையாடுவதுடன், அந்நாட்டு கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் உரை ஒன்றும் வழங்கவுள்ளார்.
திருப்பீட வெளியுறவுத்துறைச் செயலரின் பயணத்திட்டத்தில் பிரதமர் Andrej Plenković அவர்களையும், வெளிநாடு மற்றும் ஐரோப்பிய விவகார அமைச்சர் Gordan Grlić-Radman அவர்களையும் சந்தித்து உரையாடுவது குறிக்கப்பட்டுள்ளது.
குரொவேசிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தைத் திறக்கவுள்ள பேராயர் காலகர், அங்கு உரை ஒன்றும் நிகழ்த்துவார்.
தலைநகரிலுள்ள Stone Gate நமதன்னை பேராலயத்தில் குரெவேசிய ஆயர்களோடு இணைந்து திருவிழா திருப்பலியையும் நிறைவேற்றி, தன் 3 நாள் பயணத்தை நிறைவுச் செய்வார் பேராயர் காலகர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்