தேடுதல்

கர்தினால் பரோலின் கர்தினால் பரோலின்  (ANSA)

லெபனான் நாட்டில் திருப்பீடச் செயலரின் 5 நாள் பயணம்

லெபனானுக்கு 70 ஆண்டுகளாக அடிப்படை பிறரன்புப் பணிகளை ஆற்றிவரும் Knights of Malta குழு, 2020ஆம் ஆண்டிலிருந்து விவசாய-மனிதாபிமானத் திட்டங்களுக்கும் உதவுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

லெபனான் நாட்டின் அரசு உயர் மட்ட அதிகாரிகள், தலத்திருஅவைத் தலைவர்கள் மற்றும்  Knights of Malta என அறியப்படும் மால்ட்டாவின் இறையாண்மை குழுவின் பணிகளையும் சென்று பார்வையிடும் நோக்கத்தில் அந்நாட்டில் 5 நாள் பயணத்தை மேற்கொண்டுவருகிறார் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.

இம்மாதம் 23ஆம் தேதி, அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று லெபனான் நாட்டிற்குச் சென்று 5 நாள் திருப்பயணத்தை மேற்கொண்டுவரும் திருப்பீடச் செயலர் பரோலின் அவர்கள், அரசு உயர் அதிகாரிகள், மாரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, தலத்திருஅவை அதிகாரிகள், முதுபெரும் தந்தையர்கள், மதத்தலைவர்கள் ஆகியோரை சந்திப்பதுடன், பல்வேறு நாடுகளில் மருத்துவ மற்றும் பிறரன்புப் பணிகளை ஆற்றிவரும் Knights of Malta குழுவின் பணிகளையும் சென்று பார்வையிடுவார்.

லெபனான் நாட்டில் நிர்வாக ரீதியான தீர்வு காண்பதற்கு உதவி வரும் திருப்பீடம், அந்நாட்டில் பிறரன்புப் பணிகளை தொடர்ந்து ஆற்றிவரும் கத்தோலிக்க அமைப்பான Knights of Malta குழுவுக்கு ஊக்கத்தை வழங்கும் விதமாக இந்த பயணம் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் கர்தினால் பரோலின்.

லெபனானில் 5 நாள் பயணத்தை மேற்கொண்டுவரும் திருப்பீடச் செயலர், ஜூன் 27ஆம் தேதி, அதாவது இந்த வியாழனன்று வத்திக்கான் திரும்புவார்.

லெபனான் மக்களுக்கு கடந்த 70 ஆண்டுகளாக அடிப்படை மருத்துவ உதவிகளையும் சமுதாயப் பணிகளையும் ஆற்றிவரும் Knights of Malta குழு, 2020ஆம் ஆண்டிலிருந்து விவசாய-மனிதாபிமானத் திட்டங்களையும் தீட்டி, அந்நாட்டில் உணவு பாதுகாப்பு, பொருளாதார மீட்பு ஆகியவைகள் வழியாக ஏழை மக்களுக்கு உதவி வருகின்றது.

Knights of Malta பிறரன்பு குழு ஆறு விவசாய-மனிதாபிமானத் திட்டங்கள் வழியாக அந்நாட்டின் 69.26 விழுக்காட்டு நிலத்தின் விவசாயத்திற்கு உதவி வருகிறது.

அண்மை புனித பூமி போரால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும் லெபனான் நாட்டில் 80 விழுக்காட்டு மக்கள் ஏழ்மையில் வாடிவரும் நிலையில், அந்நாட்டிற்கான பிறரன்பு உதவிகளை அதிகரித்துள்ளது இப்பிறரன்பு அமைப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 June 2024, 14:29