தேடுதல்

வத்திக்கான் வங்கியின் உட்பக்கம் வத்திக்கான் வங்கியின் உட்பக்கம் 

2023ல் வத்திக்கான் வங்கிக்கு 30.6 மில்லியன் யூரோ வருமானம்

நன்னெறிகளின் அடிப்படையில் முதலீடுகளை ஆற்றவேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது வத்திக்கான் வங்கி.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

வத்திக்கான் வங்கி எனவும் அறியப்படும் IOR என்ற மதப்பணிகளுக்கான நிறுவனம் 2023ஆம் ஆண்டிற்கான தன் வரவு செலவு பட்டியலில், கடந்த ஆண்டில் 3 கோடியே 6 இலட்சம் யூரோக்கள் வருமானம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கிறது.

கடந்த 12 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் வரவு செலவு ஆண்டறிக்கையை IAS-IFRS  என்ற சர்வதேச கணக்கியல் தரநிலைக்கு இயைந்தவகையில் தயாரித்து இத்தாலிய தணிக்கை வல்லுனரின் ஒப்புதலுக்குப்பின், கர்தினால்கள் அவையின் அங்கீகாரத்துடன் வெளியிட்டு வருகிறது வத்திக்கான் வங்கி.

கத்தோலிக்க நெறிமுறைகளுக்கு இயைந்தவகையில் முதலீடுகளை மேற்கொண்டு இலாபம் ஈட்டிவரும் வத்திக்கான் வங்கி, தன் இலாபத்தை திருத்தந்தை மற்றும் உலக திருஅவையின் மதப்பணிகளுக்காகவும், பிறரன்பு பணிகளுக்காகவும் செலவிட்டு வருகிறது.

IOR என அழைக்கப்படும் வத்திக்கான் வங்கி, கடந்த ஆண்டில் 3 கோடியே 6 இலட்சம் யூரோ வருமானத்தைக் கண்டதாகவும், வத்திக்கான் வங்கியின் வாடிக்கையாளர்களின் கணக்கில் 540 கோடி யூரோக்கள் இருப்பதாகவும் இந்த வரவு செலவு அறிக்கைத் தெரிவிக்கிறது.

2023ஆம் ஆண்டின் வரவு செலவு அறிக்கையில் நல்ல வருமானம் குறிப்பிடப்பட்டுள்ளதையொட்டி, அந்த 3 கோடியே 6 இலட்சம் வருமானத்தில், 1 கோடியே 36 இலட்சம் யுரோக்களை மத மற்றும் பிறரன்புப் பணிகளுக்கு என வழங்க உள்ளதாக பொருளாதரம் குறித்த கர்தினால்கள் அவை தீர்மானித்துள்ளது.

கணனி மயமாக்கல், மற்றும் வாடிக்கையாளர் சேவை மேம்படுத்தப்படுதல் போன்றவை வழியாக செலவீனம் கட்டுப்படுத்தப்பட்டதும், வருமானத்தை அதிகரித்ததற்கு ஒரு காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து பல ஆண்டுகளாக கத்தோலிக்க ஒழுக்க நெறிகளுக்கு இயைந்தவகையில் முதலீடுகளை செய்துவரும் வத்திக்கான் வங்கி, நன்னெறிகளின் அடிப்படையில் முதலீடுகளை ஆற்றவேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது என்பதும் இந்த அறிக்கையின் இறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 June 2024, 11:02