2-வது ஒருங்கிணைந்த பயண அமர்விற்கான செயல்முறை தயாரிப்புத் தொடக்கம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உலக ஆயர்கள் மாமன்ற பொதுச் செயலகத்தின் 15-வது பொதுச் சபை உறுப்பினர்கள், வரவிருக்கும் இரண்டாவது ஒருங்கிணைந்த பயண அமர்விற்கான Instrumentum laboris என்ற வரைவுத் தொகுப்பு தயாரிப்பைத் தொடரும் வேளை, திருத்தந்தையை சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளனர்.
இவ்வாண்டில் இடம்பெற உள்ள இரண்டாவது உலக ஆயர் மாமன்ற தாயாரிப்புக் கூட்டத்திற்கு உதவும் வகையில் கடந்த ஒன்றரை வாரங்களாக 20 இறையியலாளர்கள் உரோம் நகரில் கூடி Instrumentum laboris என்ற வரைவுத் தொகுப்புத் தயாரிப்பு ஏட்டை, இறைமக்களின் பதிலுரைகளின் உதவியுடன் தயாரித்துள்ளனர்.
கடந்த ஒன்றரை வாரங்களாக உரோமில் இடம்பெற்ற இறையியலாளர் கூட்டத்தின்போது, உலகின் ஆயர் பேரவைகள், கீழை வழிபாட்டு முறை கிறிஸ்தவ சபைகள், துறவியர் அமைப்புக்கள், பங்குதள அருள்பணியாளர்கள் மற்றும் இறைமக்களின் கருத்துக்களைத் தாங்கிய 100க்கும் மேற்பட்ட அறிக்கைகள் விவாதிக்கப்பட்டன.
இந்தப் பணிகள் குறித்து விளக்கிய உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச்செயலர் கர்தினால் மாரியோ கிரேக் (Mario Grech) அவர்கள், ஒன்றிணைந்த பயணத்தின் முழு செயல்முறையையும் (entire synod) உயிரூட்டம் (animation) செய்த சுற்றறிக்கையின் கொள்கையுடன் தொடர்ந்து நிலைத்திருக்க, இந்தப் பரந்த அளவிலான ஆலோசனையை நாங்கள் மேற்கொள்ள விரும்புகிறோம் என்று கூறினார்.
வரவிருக்கும் நாள்களில், பரந்த அளவிலான மதிப்பாய்வில் இருந்து வரைவுத் தொகுப்பு (Instrumentum laboris) தயாரிப்பு ஏட்டின் புதிய பதிப்பு வரைவு செய்யப்படும் என்றும், அந்த வரைவு, இறுதி ஒப்புதலுக்காகத் திருத்தந்தைக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர், பொதுச் சபையின் (Ordinary Council) ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்