தேடுதல்

பலிபீட சிறாரிடையே திருத்தந்தை பலிபீட சிறாரிடையே திருத்தந்தை  (ANSA)

பலிபீட உதவியாளர்களின் பணி, கடவுளுக்கும் மற்றவர்களுக்குமானது

ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3 வரை உரோம் நகரில் திருப்பயணம் மேற்கொள்ளும் ஐரோப்பாவின் 50,000 பலிபீடச்சிறாருடன் இணைந்துள்ள லக்ஸம்பர்க் கர்தினால் Hollerich.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருப்பலிகளிலும் திருச்சடங்குகளிலும் உதவும் பலிபீடச் சிறார்கள் மற்றும் சிறுமிகளின் பணி, கடவுளுக்கும் மற்றவர்களுக்குமானது என்றார் கர்தினால் Jean-Claude Hollerich.

ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3 வரை உரோம் நகரில் திருப்பயணம் மேற்கொள்ளும் ஐரோப்பாவின் 50,000 பலிபீடச்சிறாருடன் இணைந்து பயணிக்கும் லக்ஸம்பர்க் பேராயர் கர்தினால் Hollerich அவர்கள், உரோம் நகரின் 4 பெருங்கோவில்களை சந்திக்கும் இந்த பலிபீட சிறார், திருத்தந்தையையும் சந்திப்பர் என்றார்.

ஜூலை 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று மாலை உள்ளூர் நேரம் 6 மணிக்கு புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பலிபீட சிறார் மற்றும் சிறுமிகளின் பன்னாட்டு அமைப்பால் ஏற்பாடுச் செய்துள்ள இந்த திருப்பயணத்தில் ஏறக்குறைய 35,000 பேர் ஜெர்மனியிலிருந்தும், ஏனையோர் ஆஸ்டிரியா, குரோவேசியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, உக்ரைன் ஆகிய நாடுகள் உட்பட ஐரோப்பா முழுவதுமிருந்தும் பங்குபெறுகின்றனர்.

பலிப்பீட உதவியாளர்களின் இந்த திருப்பயணத்திற்கு எசாயா நூலின் வார்த்தைகளான “நான் உன்னுடன் இருக்கிறேன்” (எசா 41:10) என்பது தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டிய கர்தினால், திருவழிபாட்டுச் சடங்குகளில் முதலில் கடவுளுக்கும் பின்னர் மற்றவர்களுக்கும் சேவையாற்றுகிறோம், ஏனெனில் நம் சகோதரர் சகோதரிகளுக்கு சேவையாற்றாமல் நாம் கடவுளுக்கு பணிபுரிய முடியாது என்பதையும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 July 2024, 13:42