தேடுதல்

எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறையின் முதுபெரும் தந்தை கர்தினால் Pierbattista Pizzaballa எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறையின் முதுபெரும் தந்தை கர்தினால் Pierbattista Pizzaballa  (ANSA)

ஒன்றிணைந்து செபிக்க முயலுங்கள் – கர்தினால் Pizzaballa

போரினால் ஏற்படும் காயங்களிருந்து இரத்தம் வழியும் நேரம், அரசியல் பேசுவதற்கான நேரமல்ல - கர்தினால் Pierbattista Pizzaballa.

மெரினா ராஜ் - வத்திக்கான்

அரசியல் சூழலை விட்டு வெளியேறி ஒன்றிணைந்து செபிக்க வேண்டும் என்று வலியுறுத்தி புனித பூமியில் உள்ள கிறிஸ்தவர்களை ஜெபத்தில் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் முதுபெரும் தந்தை கர்தினால் Pierbattista Pizzaballa.

அண்மையில் ACN எனப்படும் தேவையிலிருப்போர்க்கு உதவும் தலத்திருஅவை அமைப்பினரிடம், புனித பூமியில் உள்ள கிறிஸ்தவர்களின் நிலைமை, தலத்திரு அவையின் பங்களிப்பு பற்றி பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார் எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறையின் முதுபெரும் தந்தை கர்தினால் Pierbattista Pizzaballa

புனித பூமியில் உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும், தொடர்ச்சியான வன்முறை மற்றும் துயரத்தின் தருணத்தில், அரசியல் உரையாடல்களில் இருந்து பின்வாங்கி ஒன்றிணைந்து ஜெபிக்கும்படி அழைப்பு விடுத்துள்ள கர்தினால் Pizzaballa அவர்கள், காசாவில் துன்புறும் மக்களோடு உரையாடினால் அவர்கள் படும் துயரத்தை உணர முடியும் என்றும் கூறியுள்ளார்.

அரசியல் சூழலை விட்டு நாம் வெளியேற வேண்டும், ஒன்றாக இணைந்து செபிக்க வேண்டும் என்றும், போரினால் ஏற்படும் காயங்களிருந்து இரத்தம் வழியும் நேரம், அரசியல் பேசுவதற்கான நேரமல்ல என்றும், ஒருவர் துன்புறும்போது அடுத்தவரின் துன்பத்தை அடையாளம் காண்பது மிகவும் கடினம் என்றும் சுட்டிக்க்காட்டியுள்ளார் கர்தினால் Pizzaballa.

காசாவில் உள்ள சிறிய கிறிஸ்தவக் குழுவிற்கு உதவ முதுபெரும்தந்தையின் கீழ் உள்ள தலத்திருஅவை தன்னால் முடிந்ததைச் செய்து வருகிறது என்று கூறிய முதுபெரும்தந்தை Pizzaballa அவர்கள், காசாவில் நிலைமை மிகவும் நிலையற்ற வகையில் உள்ளது என்றும், அடிப்படை உதவி தேவைப்படும் இடங்களில் உள்ள மக்களுக்கு அவர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கப்பெற வாரங்கள் ஆகலாம் என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 July 2024, 14:22