அறிவுசார் சொத்துரிமை தொடர்பான புதிய ஒப்பந்தத்தை வரவேற்கிறது திருப்பீடம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அனைத்துலக அமைப்புகளுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Ettore Balestrero அவர்கள், அறிவுசார் சொத்துரிமை தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய ஒப்பந்தத்தை வரவேற்பதாகக் கூறியுள்ளார்.
ஐ.நா.-வின் உலக அறிவுசார் சொத்து அமைப்பின் (WIPO) உறுப்பு நாடுகளுக்கு ஆற்றிய உரையில் இவ்வாறு தெரிவித்துள்ள, பேராயர் Balestrero அவர்கள், இந்த ஒப்பந்தத்தை முன்னேற்றத்திற்கான முக்கியமான படி என்று அழைத்துள்ளார்.
WIPO உறுப்பு நாடுகளின் 65-வது தொடருக்கான தனது உரையில், பூர்வகுடி மக்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களின் பங்கேற்பு, அவர்கள் வாழும் குறிப்பிட்ட கலாச்சார மற்றும் சட்டச் சூழல்களுக்கு உணர்திறன் அளிக்கும் விதத்தில் வலியுறுத்துவதைத் திருப்பீடம் பாராட்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் பேராயர் Balestrero.
தூதரக உறவு நிலையில், பாரம்பரிய அறிவு மற்றும் பாரம்பரிய கலாச்சார வெளிப்பாடுகள் பற்றிய பேச்சுவார்த்தைகளில் புத்துயிர் பெற இந்த ஒப்பந்தம் உதவும் என்று கூறியுள்ள பேராயர், இந்த ஒப்பந்தம் ஒருமித்த கருத்துடன் எட்டப்பட்டது என்ற உண்மையை திருப்பீடம் முக்கியமானதாகக் கருதுகிறது என்றும் உரைத்துள்ளார்.
இணைய நெறிமுறை (IP) அமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஆக்கபூர்வமான உரையாடலை வளர்ப்பதற்காக WIPO உடனான எதிர்கால ஒத்துழைப்புக்கான திருப்பீடத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தி தனது உரையை நிறைவு செய்துள்ளார் பேராயர் Balestrero.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்