தேடுதல்

திருப்பீட வெளியுறவுத்துறைச் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர். திருப்பீட வெளியுறவுத்துறைச் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர். 

மனிதகுலத்தின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் செயல்கள்

அதிகார சமநிலையைப் பற்றி மட்டும் சிந்திப்பது போதாது, புதிய பிரச்சினைகளுக்கு பதிலளித்தல், சுற்றுச்சூழல், பொது சுகாதாரம், கலாச்சாரம் மற்றும் சமூக சவால்களுக்கு உலகளாவிய வழிமுறைகளுடன் எதிர்வினையாற்றுவது ஆகியவையும் தேவை. - பேராயர் காலகர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

அதிகாரம் அல்லது மேலாதிக்கத்தைப் பின்தொடர்வதற்குப் பதிலாக, திருஅவையின் தூதுறவானது அனைத்து மனிதகுலத்தின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் என்றும், மனித மாண்பை நிலைநிறுத்துகின்ற மற்றும் நீடித்த அமைதிக்காக போராடுகின்ற கொள்கைகளில் வேரூன்றியுள்ளது என்றும் கூறினார் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.

ஜூலை 5 வெள்ளிக்கிழமை மணிலாவின் Pasay நகரத்தில் நடைபெற்ற வெளிநாட்டுச்சேவை நிறுவனத்தின் கூட்டத்தில் பங்கேற்று “இன்றைய பன்னாட்டுச் சூழலில் திருஅவையின் தூதுறவு” என்ற தலைப்பில் பேசியபோது இவ்வாறு கூறினார் திருப்பீட வெளியுறவுத்துறைச் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.

திருஅவையின் தூதுறவானது பொதுநலன், நாடுகளுக்கிடையே ஒற்றுமை, துணைத்தன்மை ஆகியவற்றை முன்னிறுத்தி நமது காலத்தின் அவசரப் பிரச்சனைகளை எதிர்கொள்ள முயல்கிறது என்றும், திருத்தந்தை வலியுறுத்துவது போல, "நமது உலகம் பன்முகத்தன்மை கொண்டதாகவும், அதே நேரத்தில் மிகவும் சிக்கலானதாகவும் மாறியுள்ளது எனவே அதற்கு, பயனுள்ள ஒத்துழைப்புக்கான வேறுபட்ட கட்டமைப்புக்கள் தேவைப்படுகின்றன என்றும் எடுத்துரைத்தார் .

அதிகார சமநிலையைப் பற்றி மட்டும் சிந்திப்பது போதாது என்றும் புதிய பிரச்சினைகளுக்கு பதிலளித்தல், சுற்றுச்சூழல், பொது சுகாதாரம், கலாச்சாரம் மற்றும் சமூக சவால்களுக்கு உலகளாவிய வழிமுறைகளுடன் எதிர்வினையாற்றுவது ஆகியவையும் தேவை என்றும் வலியுறுத்தினார் பேராயர் காலகர்.

இக்காலத்தில் வாக்குறுதி, ஆபத்து ஆகிய இரண்டிற்கும் மத்தியில் நாம் வாழ்கின்றோம் என்றும், எதிர்பாராத வகையில் நாடுகள் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் வகையில் பொருள்கள், சிந்தனைகள், தொழில்நுட்ப அறிவு போன்றவற்றின் பரிமாற்றம் உள்ளது என்றும் கூறினார்.

தகவல்களும் யோசனைகளும் உலகளவில் முன்னோடியில்லாத வேகத்தில் பயணிக்கின்றன என்று குறிப்பிட்ட பேராயர் காலகர் அவர்கள், அதே நேரத்தில் தொழில்நுட்ப முன்னேற்றங்களும் பொருளாதார வளர்ச்சியும் சர்வதேச உறவுகளை ஆழமாக மறுவடிவமைத்துள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 July 2024, 11:59