தேடுதல்

பேராயர் Peña Parra பேராயர் Peña Parra 

ஹோண்டுராஸ் தலத்திருஅவையில் புதுப்பிக்கப்பட்ட திருப்பீடத்தூதரக இல்லம்

ஹோண்டுராஸ் தலத்திருஅவை மற்றும் திருப்பீடம் இரண்டிற்கும் இடையிலான உறவு என்பது, கடவுளின் இதயம், அவரது மக்கள் மீது அவர் கொண்ட அன்பிலிருந்து பிறந்தது. - பேராயர் Peña Parra

மெரினா ராஜ் - வத்திக்கான்

திருஅவையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு ஆணும், பெண்ணும் கடவுளின் அன்பான குழந்தை என்றும்,  மனிதகுல மக்கள் அனைவரிடமும், படைப்பைப் பாதுக்காத்து பராமரிக்கும் வண்ணம் அதனைக் கொடையாகக் கடவுள் கொடுத்துள்ளார் என்றும் கூறினார் பேராயர் Edgar Peña Parra.

ஜூலை 12 வெள்ளிக்கிழமை மத்திய அமெரிக்காவின் ஹோண்டுராஸ் பகுதியில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட திருப்பீடத்தூதரக இல்லத்திறப்பு விழாவின்போது இவ்வாறு கூறினார் திருப்பீடச் செயலகத்தின் பொது விவகாரத்துறையின் நேரடிப் பொதுச்செயலர் பேராயர் Edgar Peña Parra

ஹோண்டுராஸில் உள்ள திருத்தந்தையின் இல்லம் என்று அன்புடன் அழைக்கப்படும் இவ்வில்லமானது தூதரகப்பணி,  உள்ளூர் திருஅவையின் பணி, திருத்தந்தை மற்றும் திருப்பீடத்துடனான உறவைக் கவனித்துக் கொள்வதாகும் என்று கூறிய பேராயர் பென்னா பாரா அவர்கள், இவ்வில்லம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுத் திறக்கப்பட உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் தன் நன்றியினைத் தெரிவித்தார்.

ஹோண்டுராஸ் தலத்திருஅவை மற்றும் திருப்பீடம் இரண்டிற்கும் இடையிலான உறவு என்பது, கடவுளின் இதயம், அவரது மக்கள் மீது அவர் கொண்ட அன்பிலிருந்து பிறந்தது என்று கூறிய பேராயர் Peña Parra அவர்கள், திருப்பீடத்தூதரக இல்லம் மீண்டும் திறக்கப்படுவது  ஹோண்டுராஸ் குடியரசு மற்றும் திர்ப்பீடத்திற்கு இடையே நிகழும் பல ஆண்டுகளுக்கு இடையிலான நல்உறவுகளின் அடையாளமாக இருக்கின்றது என்றும் கூறினார்.

மனிதகுலத்தைப் பாதிக்கும் பிரச்சனைகளைக் கவனம், உணர்திறன், மனித நன்மைக்காக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் நேர்மையான மற்றும் தாழ்ச்சியான விருப்பம் கொண்ட பார்வையாளர்களாக இருக்க வேண்டும் என்றும், ஒருங்கிணைந்த மற்றும் உலகளாவிய வழியில் வளர்ச்சியடைய முயல வேண்டும் என்றும் வலியுறுத்தினார் பேராயர் Parra.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 July 2024, 13:24