ஜப்பானில் உலக மதத் தலைவர்களின் இரண்டு நாள் கூட்டம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் உலகின் முக்கிய மதங்களின் தலைவர்கள் ஒன்று கூடி, செயற்கை நுண்ணறிவு (AI) நெறிமுறை மற்றும் அமைதிக்கான பொறுப்புடன் உருவாக்கப்படுவதை உறுதிசெய்வதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் இரண்டு நாள் கூட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர்.
'செயற்கை நுண்ணறிவு அமைதிக்கான நெறிமுறைகள்' என்ற தலைப்பில் நடைபெறும் இந்த இரண்டு நாள் உலக மன்றம், பாப்பிறை வாழ்வுக் கழகம், ஜப்பானின் அமைதிக்கான மதங்கள் அமைப்பு, அமைதிக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி மன்றம், இஸ்ரயேலின் பன்னாட்டுமத உறவுகளுக்கான ஆணையத்தின் தலைமை ரபினேட் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 8, இச்செவ்வாயன்று தொடங்கிய பல நம்பிக்கை நிகழ்வின் சிறப்பம்சமாக, 2020 ஆம் ஆண்டில் பாப்பிறை வாழ்வுக் கழகம் வழங்கிய செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகளுக்கான உரோமையின் அழைப்பு மற்றும் renaissance பிறரன்பு அமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் கையொப்பமிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய இம்மன்றத்தின் அமைப்பாளர்கள், இடத்தைத் தேர்ந்தெடுப்பது ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்றும், ஏனெனில் ஹிரோஷிமா அழிவுகரமான தொழில்நுட்பத்தின் விளைவுகளுக்கும் அமைதிக்கான நீடித்த தேடலுக்கும் ஒரு வலிமை வாய்ந்த சான்றாக உள்ளது என்றும் கூறியுள்ளனர்.
இம்மன்றத்தில் தொடக்க உரையாற்றிய பாப்பிறை வாழ்வுக் கழகத்தின் தலைவர் ஆயர் Vincenzo Paglia அவர்கள், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, வரம்பற்ற பயன்பாட்டு சாத்தியக்கூறுகளைக் கொண்ட ஒரு சிறந்த கருவி என்பதையும், ஒவ்வொரு மனிதரின் மாண்பபையும், நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியையும் பாதுகாப்பதில் கைகோர்த்துச் செல்வதை உறுதிசெய்ய மதங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதையும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தினார்.
மிகவும் குறியீட்டு இடமாக அமைத்துள்ள ஹிரோஷிமாவில், நாங்கள் அமைதியை வலுவாக ஏற்படுத்த அழைப்புவிடுக்கிறோம் என்றும், தொழில்நுட்பம் மக்களிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றும் கூறியுள்ள ஆயர் Paglia அவர்கள், ஒன்றிணைந்து நிற்பதும் ஒன்றிணைந்து செயல்படுவதும் மட்டுமே இதற்கு சாத்தியமான தீர்வு என்பதை உரக்கச் சொல்ல நாங்கள் இங்கே ஒன்றாக நிற்கிறோம் என்றும் உரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்