Scholas Occurrentes உருவாகிய இடத்தில் கர்தினால் தெமெந்தோன்செ
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
Scholas Occurrentes என்ற பன்னாட்டு கல்வி அமைப்பு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் அர்ஜெண்டினாவின் புவெனஸ் ஐரஸில் துவக்கிவைக்கப்பட்ட இடத்தைச் சென்று பார்வையிட்டார் கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் ஜொஸெ தொலந்தினொ தெமெந்தோன்செ (José Tolentino de Mendonça).
வரலாற்று சிறப்புவாய்ந்த இந்த இடத்தைச் சென்று பார்வையிட்ட கர்தினால் தெமெந்தோன்செ அவர்கள், திருத்தந்தையுடன் இணைந்து இதனை உருவாக்க உதவிய José María del Corral, Enrique Palmeyro ஆகியோரையும் சந்தித்து உரையாடினார்.
2001ஆம் ஆண்டு அர்ஜெண்டினாவில் இடம்பெற்ற பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, பல்வேறு மதங்களையும் சமூகங்களையும் சேர்ந்த மாணவர்களை கலாச்சார அடிப்படையிலான சந்திப்பிற்கென, புவெனெஸ் ஐரஸ் பேராயராக கர்தினால் ஹோர்கே பெர்கோலியோ (தற்போதைய திருத்தந்தை) அவர்கள் இருந்தபோது அழைத்துவரத் தொடங்கினர் del Corral மற்றும் Palmeyro.
தற்போது அர்ஜெண்டினா நாட்டிற்குச் சென்று, Scholas Occurrentes அமைப்பு துவக்கப்பட்ட தலைமையகத்தை பார்வையிட்டதுடன், அவ்வமைப்பால் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ள விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களையும் சந்தித்து உரையாடினார் கர்தினால் தெமெந்தோன்செ.
Scholas Occurrentes கல்வி அமைப்பின் அங்கத்தினர்களின் சான்றுபகர்தலும் கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் தெமெந்தோன்செ அவர்களின் முன்னிலையில் இடம்பெற்றது.
Scholas Occurrentes கல்வி அமைப்பு தற்போது 5 கண்டங்களில் உள்ள 70 நாடுகளில் செயலாற்றி வருகின்றது. வரும் மாதம், அதாவது செப்டம்பர் மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்தோனேசியாவில் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளும்போது 4ஆம் தேதி அந்நாட்டிற்கான இவ்வமைப்பின் முதல் கிளை துவக்கிவைக்கப்படும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்