தேடுதல்

திருப்பீட பிரதிநிதி பேராயர் கபிரியேலே காச்சா. திருப்பீட பிரதிநிதி பேராயர் கபிரியேலே காச்சா. 

தனிநபரின் உள்ளார்ந்த மாண்பை அங்கீகரிப்பது கட்டாயம்

பொது நலனுக்கான பணியில் தன்னை அன்பு செய்வதும், பிறருக்குத் தன்னைக் கொடுப்பதுமே உண்மையான சுதந்திரமாகும்

மெரினா ராஜ் – வத்திக்கான்

அமைதிக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதில், ஒவ்வொரு தனிநபரின் உள்ளார்ந்த மாண்பை அங்கீகரிப்பது கட்டாயம் என்றும், குடும்பம் மற்றும் கல்விச் செயல்பாடுகளில் குழந்தைகள் கடவுள் வழங்கிய உள்ளார்ந்த மனித மாண்பைப் பற்றிப் புரிந்துகொள்ளுதல், அவர்களின் திறன்களை வளர்த்துக்கொள்ளுதல் வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருப்பீட பிரதிநிதி பேராயர் கபிரியேலே காச்சா.

ஆகஸ்ட் 2 வெள்ளிக்கிழமை அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் “தற்கால மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கான அமைதி கலாச்சாரத்தை உருவாக்குதல் மற்றும் வளர்த்தல் என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறு கூறினார் திருப்பீடத்தின் சார்பில் உரையாற்றிய திருப்பீட பிரதிநிதி பேராயர் கபிரியேலே காச்சா.

அமைதி கலாச்சாரத்தை உருவாக்குதல் மற்றும் வளர்த்தெடுத்தலில் நமக்குள்ள அர்ப்பணிப்பையும் உறுதிப்பாட்டையும் எடுத்துரைக்கும் விதமாக இந்த உயர்மட்டக் கூட்டம் உள்ளது என்று கூறிய பேராயர் காச்சா அவர்கள், உண்மை, நீதி, தொண்டு, சுதந்திரம் ஆகிய நான்கின் அடிப்படையில் அமைதியைப் பற்றி எடுத்துரைத்தார்.

உண்மையில் அமைதி

அமைதிக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதில், ஒவ்வொரு தனிநபரின் உள்ளார்ந்த மாண்பை அங்கீகரிப்பது கட்டாயம் என்றும், குடும்பம் மற்றும் கல்விச் செயல்பாடுகளில் குழந்தைகள் கடவுள் வழங்கிய உள்ளார்ந்த மனித மாண்பைப் பற்றிப் புரிந்துகொள்ளுதல், அவர்களின் திறன்களை வளர்த்துக்கொள்ளுதல் வேண்டும் என்றும் வலியுறுத்தினார்

நீதியில் அமைதி

அமைதிக்கான விருப்பம் என்பது நீதியை நிலைநிறுத்துவதைப் பொறுத்தது என்றும், வறுமை, பசி, சமத்துவமின்மை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதன் வழியாக சமூக மற்றும் பொருளாதார நீதியை மேம்படுத்துவது கட்டாயம் என்றும் சுட்டிக்காட்டினார் பேராயர் காச்சா.

தொண்டுப்பணிகளில் அமைதி

பல நேர்மறையான முன்னேற்றங்களை உலகமயமாக்கல் கொண்டு வந்துள்ளது என்றாலும், அவை அனைத்தும், நாடுகளுக்குள்ளும் நாடுகளுக்கிடையிலும் சமமாக பகிர்ந்தளிப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய பேராயர் காச்சா அவர்கள், உலகமயமாக்கலினால் சிலர் குடியுரிமை பெற்றவர்களாகவும், பலர் புலம்பெயர்ந்தவர்களாகவும் குடியுரிமையற்றவர்களாகவும் மாறியுள்ளனர் என்று எடுத்துரைத்தார்.

சுதந்திரத்தில் அமைதி

மனித வளர்ச்சிக்கு அடிப்படையானது சுதந்திரத்தை தனிப்பட்ட நோக்கமாக கருதப்படக்கூடாது, மாறாக, பொது நலனுக்கான பணியில் தன்னை அன்பு செய்வதும், பிறருக்குத் தன்னைக் கொடுப்பதுமே உண்மையான சுதந்திரமாகும் என்றும் கூறினார் பேராயர் காச்சா.

"அமைதி என்பது உறவுகளின் பலன், அது மற்றவர்களை அவர்களின் பிரிக்க முடியாத மாண்பில் அங்கீகரிக்கிறது மற்றும் வரவேற்கிறது என்றும், அனைத்து தனிநபர்கள் மற்றும் மக்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை நாடுவதில் ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பும் தேவை” என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்துக்களையும் மேற்கோள் காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 August 2024, 15:02