தேடுதல்

பிரான்சின் Pellevoisin இரக்கத்தின் மரியன்னை திருத்தலம் பிரான்சின் Pellevoisin இரக்கத்தின் மரியன்னை திருத்தலம் 

Pellevoisin நமதன்னை திருத்தல பக்தி முயற்சிகள் தொடர தடையில்லை

1843ஆம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்த Estelle தன் இளவயதிலேயே கடின நோயுற்று தன் 32ஆம் வயதில் முதன்முறையாக அன்னை மரியாவை காட்சியில் கண்டார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

1876ஆம் ஆண்டு பிரான்சின் Pellevoisin சிறு நகரில் அன்னை மரியா Estelle Faguette என்ற இளம்பெண்ணுக்கு காட்சியளித்த இடத்தில் கட்டப்பட்ட இரக்கத்தின் நமதன்னை திருத்தலத்தில் மரியன்னை பக்தி முயற்சிகள் தொடர்ந்து இடம்பெற எவ்விதத் தடையும் இல்லை என அறிவித்துள்ளது விசுவாசக் கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறை.

அசாதாரண நிகழ்வுகளின் பண்பு நலன் குறித்தோ, இந்நிகழ்வுகளின் தெய்வீக மூலம் குறித்தோ கருத்துக்களை வெளியிடுவது விசுவாசக் கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறையின் நடைமுறை இல்லையெனினும், அன்னமரியா காட்சி கொடுத்த இளம்பெண்ணின் வார்த்தைகளிலிருந்து, அவர் கண்ட அனுபவங்களில் தூய ஆவியாரின் செயல்பாடுகள் இருப்பதை காணமுடிகிறது என தெரிவித்துள்ளது விசுவாசக் கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறை.

இந்த மரியன்னை திருத்தலத்தில் பக்தி முயற்சிகள் தொடர எவ்வித தடையும் இல்லை என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பிரான்ஸ் பேராயர் Jérôme Daniel Beau அவர்களுக்கு, விசுவாசக் கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறையின் தலைவர், கர்தினால் Victor Manuel Fernández அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

1843ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்த Estelle தன் இளவயதிலேயே கடின நோயுற்று தன் 32ஆம் வயதில் முதன்முறையாக அன்னை மரியாவை காட்சியில் கண்டார்.

அன்னை மரியா வாக்குறுதி அளித்ததுபோல் அவரின் ஐந்தாவது காட்சியின்போது அன்னையின் பரிந்துரையால் Estelle  முற்றிலுமாக குணமடைந்தார்.

இவர் 1925ஆம் ஆண்டு தொமினிக்கன் துறவு சபையில் இணைந்து 1929ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி தன் 86ஆம் வயதில் காலமானார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 August 2024, 17:47