தேடுதல்

செய்தியாளர்கள் சந்திப்பின்போது செய்தியாளர்கள் சந்திப்பின்போது  

புலம்பெயர்ந்தோரை வரவேற்பதில் திருஅவையின் பங்களிப்பு

புலம்பெயர்ந்தோரின் குரலைக் கேட்க மத்திய தரைக்கடல் திருஅவைச் சங்கம் என்னும் புதிய சிந்தனை உலக ஆயர் மாமன்றத்தின்போது முன்மொழியப்பட்டதுடன், இச்சங்கம் புலம்பெயர்ந்தோரை வரவேற்பதில் திருஅவையின் பங்களிப்பும் பாராட்டப்பட்டது.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

புலம்பெயர்ந்தோரின் குரலைக் கேட்க மத்திய தரைக்கடல் திருஅவைச் சங்கம் என்னும் புதிய சிந்தனை உலக ஆயர் மாமன்றத்தின்போது  முன்மொழியப்பட்டது என்றும், இச்சங்கம் புலம்பெயர்ந்தோரை வரவேற்பதில் திருஅவையின் பங்களிப்பையும், இப்பணியை ஆதரிக்கும் வலைத்தளங்களையும் பாராட்டியது என்றும் தெரிவித்தார் திருப்பீடத் தகவல் தொடர்புத் துறையின் தலைவர் முனைவர் Paolo Ruffini.

அக்டோபர் 17, வியாழனன்று செய்தியாளர்கள்  சந்திப்பில் புலம்பெயர்ந்தோருக்கான, மேய்ப்புப்பணிப் பராமரிப்பில் அர்ப்பணிப்புடன் செயல்படும் திருஅவையின் பணிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதாகவும், இளையோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மீதும் ஆயர் மாமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் எடுத்துரைத்தார் முனைவர் Ruffini.

திருஅவையின் பங்களிப்பிற்கு புத்துயிர் அளிக்கவும், இளையோரின் நேரடி ஈடுபாடு மற்றும் மாற்றுத்திறனாளிகள் மீது  உண்மையான கவனம் செலுத்தவும், அவர்களுக்காக ஒரு குறிப்பிட்ட அமைப்பை உருவாக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் கூறினார் முனைவர் Paolo Ruffini.

இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பின்னரும், ஆயர் மன்றங்களின் இறையியல் நிலை தெளிவாக இல்லை என்பது வியப்பாக உள்ளது என்றும், ஆயர் மாமன்ற ஆவணங்களைத் தயாரிக்கும்போது தலத்திருஅவைகளைக் கலந்தாலோசிக்கவும், பரிந்துரைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார் முனைவர் .

உடன்பிறந்த உறவைக் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தையும், ஆயர் மாமன்ற பங்கேற்பாளர்களில் கால் பகுதியினர் பொதுநிலையினர்,இளையோர் மற்றும் துறவறத்தார் என்றும் அனைவரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார் Sisters of the Sorrowful Mother சபையின் தலைவி அருள்சகோதரி Samuela Maria Rigon அவர்கள் தெரிவித்தார்.

ஆசியாவில் ஆயர் மாமன்ற செயல்முறை குறித்தும், டிஜிட்டல் நற்செய்தி அறிவிப்பு பணி, ஆக்கப்பூர்வமான மேய்ப்புப்பணி முயற்சிகள், திருநிலையினர் சந்திக்கும் சவால்கள்  குறித்தும் பேசினார் Yangon, Myanmar உயர்மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் Charles Bo.

திருஅவையின் செவிமடுக்கும் பணிக்கு முன்மொழிவு செய்யப்பட்டது என்றும், தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆயர் மாமன்றம் தனித்துவமானது, ஏனெனில் இது உண்மையிலேயே ஒரு செயல்முறை என்றும்,தெரிவித்தார் பேராயர். கர்தினால் Charles Bo. மேலும், ஒவ்வொரு ஆயரும் ஆயர் மாமன்றத்தில் தொடங்கிய பணியைத் தொடர மறைமாவட்டங்களில்  ஆயர் மாமன்றங்களை   நடத்துவது குறித்து பரிந்துரைப்பார்கள் என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார் பேராயர். கர்தினால் Charles Bo.

மறைப்பணிகள், ஊடகங்கள், ஆன்மீக வாழ்க்கையை ஆழப்படுத்துதல் ஆகியவற்றில்  திருஅவையின் கட்டமைப்பில் மாற்றங்கள் தேவை என்று அழைப்பு விடுத்தார் Canadaவின் Québec ஐச் சேர்ந்த கர்தினால் Gérald Cyprien Lacroix.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 October 2024, 16:26