தேடுதல்

விண்வெளி விண்வெளி   (Public)

செயற்கைக்கோள் பயன்பாட்டை ஒரு பொதுநன்மையாக ஊக்குவிப்பது அவசியம்

அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தாலும், எண்ணிக்கையில் அதிகபடுத்தப்பட்ட செயற்கைக்கோள்கள், தடுப்பு நடவடிக்கைகளுக்கான செயற்கைக் கோள்கள் ஆகியவற்றுக்கான முதலீடுகள் அதிகரித்து வருவதாலும் விண்வெளி பாதுகாப்பு மற்றும் நீண்டகால நிலைத்தத்தன்மைக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுகின்றன - பேராயர் காச்சா.

மெரினா ராஜ் – வத்திக்கான்

அமைதியான செயற்கைக்கோள் பயன்பாட்டை ஒரு பொதுநன்மையாக மாநிலங்கள் ஊக்குவிப்பது அவசியம் என்றும், இதற்கு பயனுள்ள ஒத்துழைப்புக்கான அர்ப்பணிப்பு மற்றும் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு பயனளிக்கும் பலதரப்பு அணுகுமுறை தேவைப்படுகிறது என்றும் கூறியுள்ளார் பேராயர் கபிரியேலே காச்சா.

அக்டோபர் 30 புதன்கிழமை நியுயார்க் நகரில் நடைபெற்றஐக்கிய நாடுகள் பொதுஅவையின் 79ஆவது அமர்வின்போது விண்வெளியின் அமைதியான பயன்பாட்டில் பன்னாட்டு ஒத்துழைப்பு என்ற தலைப்பில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் ஐ.நா.விற்கான திருப்பீட பிரதிநிதி பேராயர் கபிரியேலே காச்சா. 

அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தாலும், எண்ணிக்கையில் அதிகபடுத்தப்பட்ட செயற்கைக்கோள்கள், தடுப்பு நடவடிக்கைகளுக்கான செயற்கைக் கோள்கள் ஆகியவற்றுக்கான முதலீடுகள் அதிகரித்து வருவது குறித்து திருஅவை கவலை அடைகின்றது என்றும்,  இவை விண்வெளி பாதுகாப்பு மற்றும் நீண்டகால நிலைத்தத்தன்மைக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்றும் எடுத்துரைத்துள்ளார் பேராயர் காச்சா.

விண்வெளியில் அமைதிக்கான ஆழ்ந்த அர்ப்பணிப்புடனும், பகிரப்பட்ட பொறுப்புணர்வுடனும் மாநிலங்கள் செயல்படுவது அவசியம் என்று வலியுறுத்திய பேராயர் காச்சா அவர்கள், 1968 ஆம் ஆண்டில், ஆயுதப்போட்டியால் உலகம் ஆழமாகப் பிளவுபட்டிருந்த நேரத்தில், திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், விண்வெளியின் அமைதியான பயன்பாடு பற்றிய மாநாட்டில் உரையாற்றினார் என்றும் எடுத்துரைத்தார்.

பொது நன்மையின் மீதான நமது நம்பிக்கை வளரும்போது, ​​விண்வெளியின் நிர்வாகம் நீதி, அமைதி மற்றும் அனைவரின் நல்வாழ்வையும் முன்னேற்றும் வழிகளில் அதன் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்றும், இன்றைய முன்னேற்றங்கள் நாளைய வளமான வாழ்க்கைக்கும், நல்லிணக்கத்திற்கும் பங்களிக்கும் சூழலை வளர்க்கும் என்றும் கூறியுள்ளார் பேராயர் காச்சா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 October 2024, 12:18