அனைவரும் அமைதியின் கருவிகளாக விளங்க வேண்டும்
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
அனைத்து தீமைகளுக்குமான முக்கிய காரணமான ஆயுத வர்த்தகத்தை கண்டிக்க ஒரு பரவலான அழைப்பு உலக ஆயர் மாமன்ற அமர்வில் விடுக்கப்பட்டது என்றும், எல்லா விதமான அடிப்படைவாதங்களையும் கண்டித்து, அனைவரும் அமைதியின் கருவிகளாக விளங்க வேண்டும் என விவாதிக்கப்பட்டது என்றும் செய்தியாளர்கள் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
அக்டோபர் 5 சனிக்கிழமை நடைபெற்ற 16ஆவது உலக ஆயர் மாமன்ற அமர்வில் அமைதிக்கான அவசர வேண்டுகோளை தொடங்கியுள்ளதுடன் அங்கு பகிரப்பட்ட கருத்துக்கள் குறித்து செய்தியாளர்கள் கூட்டத்தில் திருப்பீட சமூக ஊடகத்துறை தலைவர் முனைவர் Paolo Ruffini மற்றும் செயலர் Sheila Leocádia Pires அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
நடந்து கொண்டிருக்கும் எல்லா வன்முறைகளுக்கும் இவ்வுலகம் அமைதியாக பச்சைக் கொடிகாட்டி வருகிறது என்றும், இஸ்ரயேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளையும், அங்கீகரிப்பதற்கான தீர்மானம், இஸ்ரயேலில் உள்ள அரசியல் தலைவர்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருவதையும் Batrun மறைமாவட்ட ஆயரும், ஆயர் மாமன்ற உறுப்பினருமான Mounir Khairallah அவர்கள் நினைவுகூர்ந்தார்.
மேலும் அவர் வறுமை மற்றும் வன்முறையில் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களின் மையத்தன்மையை மீண்டும் வலியுறுத்த திருஅவையின் இந்த ஆயர் மாமன்றம் ஒரு நல்ல வாய்ப்பு என்று கூறியதுடன், அனைவரும் ஒன்றாக வாழ்வதற்கும் மற்றவருக்கு மரியாதை கொடுப்பதற்கும், பிறரின் பயத்திலிருந்து விடுபடுவதற்கும் நாம் அனைவரும் ஒரு தூதராக இருக்க வேண்டும் என்பதே இந்த ஆயர் மாமன்றத்தின் வழியாக திருஅவை எடுக்கப்பட வேண்டிய மிகப்பெரிய முடிவாகும் என்று ஆயர் தெரிவித்தார்.
அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த Cap-Haïtien உயர் மறைமாவட்டப் பேராயர் Launay Saturné அவர்கள் தனது நாடு எவ்வாறு நீண்ட காலமாக பாதுகாப்பற்ற நிலையில் வாழ்கிறது என்று கூறி, ஒழுங்கையும் அமைதியையும் நிலைநாட்ட வேண்டியவர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றவில்லை, மனித மாண்பு மிகத்தொலைவில் உள்ளது என்றும் எடுத்துரைத்தார்.
அக்டோபர் 3 வியாழனன்று நடந்த படுகொலையில் 70 பேர் உயிரிழந்ததையும், பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதையும், பலர் இடம்பெயர்ந்ததையும் நினைவுகூர்ந்த பேராயர் Launay Saturné அவர்கள், மக்கள் அனைவரும் மனச்சோர்வுற்று, நம்பிக்கை இழந்த நிலையில் இருக்கின்றார்கள் என்றும் வேதனை தெரிவித்தார்.
ஒன்றிப்பு, பங்கேற்பு, மறைப்பணி ஆகியவை பலப்படுத்தப்பட வேண்டியதன் அடிப்படை விழுமியங்களை வெளிப்படுத்துகிறது என்றும் பல துறவற சபைகள், வருங்காலத் தலைமுறையினருக்கு அவற்றைக் கொண்டு செல்ல முயற்சித்து வருவதாகவும் தெரிவித்த பேராயர் Launay Saturné அவர்கள், கிறிஸ்தவ விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை ஒரு நாள் கண்டிப்பாக மக்கள் உருவாக்குவார்கள் என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.
பிலிப்பீன்ஸ் நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதாலும், மக்கள் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு இடம் பெயர்வதாலும் உள்நாட்டிலும் குடியேற்றம் நடைபெறுகிறது என்று தெரிவித்தார் பிலிப்பீன்ஸ் நாட்டின் Kalookan ன் மறைமாவட்ட ஆயர் Pablo Virgilio S. David.
ஆயர் மாமன்ற பொதுப்பேரவை ஏழைகளின் அழுகுரலுக்கு செவிமடுகிறது என்றும் அவர்களை பெருநர்களாக அல்ல பங்கேற்பாளர்களாக சேர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினார் திருப்பீட சமூக ஊடகத் துறைத் தலைவர் Paolo Ruffini.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்