தேடுதல்

செய்தியாளர்கள் கூட்டத்தின்போது செய்தியாளர்கள் கூட்டத்தின்போது 

திருஅவையில் இளையோர், பெண்கள், திருத்தொண்டர்களின் பங்கு

திருஅவைப் பணிகளில் பாலியல் பாகுபாடுகளைத் தவிர்த்தல், பெண்களின் பங்களிப்பை அங்கீகரித்தல், முடிவெடுக்கும் செயல்முறைகள் மற்றும் செவிசாய்த்தலை முக்கிய பணியாக மேற்கொள்ளுதல் போன்றவை வலியுறுத்தப்பட்டன - செயலர் Sheila Pires.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

திருஅவையில் பொதுநிலையினர், இளையோர் மற்றும் பெண்களின் பங்கு திருத்தொண்டர்கள், உரிமை மீறலால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் பற்றி 16ஆவது  உலக ஆயர் மாமன்றத்தில் விவாதிக்கப்பட்டது என்று அக்டோபர் 9 புதன்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

திருப்பீட சமூக தகவல் தொடர்புத்துறையின் தலைவர் முனைவர் Paolo Ruffini அவர்களும், 16ஆவது  உலக ஆயர் மாமன்றச் செயலர் Sheila Pires அவர்களும் 5  வது மற்றும் 6  வது நாள் பொது அமர்வு குறித்து அறிக்கையை  திருப்பீடச்செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

திருஅவையில் பொதுநிலையினரின் பங்கு, ஆயர்கள் மற்றும் அருள் பணியாளர்களுடனான அவர்களின் ஒத்துழைப்பு, முடிவெடுக்கும் செயல் முறைகளில் பொதுநிலையினரின் ஈடுபாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது என்றும் தெரிவித்தனர்.

திருஅவைப் பணிகளில் பாலியல் பாகுபாடுகளைத் தவிர்த்தல், பெண்களின் பங்களிப்பை அங்கீகரித்தல், முடிவெடுக்கும் செயல்முறைகள் மற்றும் செவிசாய்த்தலை முக்கிய பணியாக மேற்கொள்ளுதல் போன்றவை வலியுறுத்தப்பட்டதாகவும் செயலர் Sheila Pires  கூறினார்.

மேலும் பெண்கள் எவ்வாறு செவிசாய்க்க வேண்டும் என்று நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள், அவர்கள் வித்தியாசமான வழியில் செவிமடுக்கிறார்கள் என்று கூறியதுடன் இந்த செவிசாய்த்தலை பெண்கள் ஒரு சேவையாக ஆற்ற முடியும் என்றும் இச்சேவை ஒப்புரவிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்று ஆயர் மாமன்றத்தில் பேசப்பட்டதாகவும் தெரிவித்தார் Sheila Pires.

ஊடக மேய்ப்பு பணியின் வழியாக புதிய தலைமுறையினருடன் இணைந்து செல்லும் அவசியத்தை எடுத்துரைத்த பவுலோ ருபினீ அவர்கள், இளையோர் இயக்கத்தை இளையோரிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும், திருஅவையில் உரிமை மீறலால் பாதிக்கப்பட்டவர்களின் உடன் செல்ல வேண்டிய அவசியம், பாதிக்கப்பட்டவர்களை நெருங்கிச் சென்று அவர்களுக்கு சேவை புரிதல் போன்றவற்றையும்  வலியுறுத்தியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், சீன ஆயர் ஜோசப் யாங் அவர்கள், திருப்பீடத்திற்கும், சீனாவிற்கும் இடையே 2018ம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டின் விளைவாக ஏற்பட்டுள்ள நன்மைகளைப் பாராட்டி, தன் வாழ்த்துக்களை எடுத்துரைத்ததைக் குறிப்பிட்ட ருஃபினி அவர்கள், திருஅவையில் நிரந்தர திருத்தொண்டர்களின் பங்கு, ஆயர் மாமன்றத்தில் அவர்களின் பங்கேற்பு ஆகியவை குறித்து பேசப்பட்டதாகவும் கூறினார்.

குறிப்பாக, கிறிஸ்துவை எதிர்கொள்வதில் கிறிஸ்தவர்களின் துவக்கம், திருஅவையை விட்டுச்செல்லும் இளையோர், திருஅவை மற்றும் சமூகத்துடனான தூய்மையான உறவிற்கு இட்டுச்செல்லும் ஒருமைப்பாட்டின் ஆன்மிகம் ஆகியவைக் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் Ruffini  அவர்கள் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 October 2024, 13:29