தேடுதல்

அருளாளர் பட்ட திருப்பலியின்போது கர்தினால் மர்செல்லோ  செமராரோ அருளாளர் பட்ட திருப்பலியின்போது கர்தினால் மர்செல்லோ செமராரோ 

திருஅவையின் புதிய அருளாளர்கள் Luigi Paliq மற்றும் Gjon Gazulli

அருளாளர்கள் Luigi Paliq மற்றும் Gjon Gazulli இருவரும் மக்களுக்கு நன்மையைச் செய்தவர்கள், அவதூறு சாட்டப்பட்டு, பொய்களால் கண்டனம் செய்யப்பட்டார்கள். அல்பேனிய இன மக்களுக்கு எதிராக அடக்குமுறைக் கொள்கையை எதிர்த்து போரிட்டபோது மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டவர்கள்

மெரினா ராஜ் - வத்திக்கான்

பொய்யானது கிறிஸ்துவிடமிருந்தும் உடன் சகோதர சகோதரிகளிடமிருந்தும், மற்றவர்களிடமிருந்தும் நம்மை அந்நியப்படுத்துகிறது, பிளவுபடுத்துகிறது, பகை, சண்டை, மரணம் ஆகியவற்றை உருவாக்குகிறது என்றும், இதற்கு மாறாக உண்மை நம்மை ஒன்றுபடுத்துகிறது, வழியும் உண்மையும் வாழ்வுமாய் இருக்கின்ற இறைவனுடன் நம்மை இணைக்கின்றது என்றும் கூறினார் கர்தினால் மர்செல்லோ செமராரோ.

நவம்பர் 16 சனிக்கிழமை அல்பேனியாவின் ஸ்குத்தாரியில் உள்ள தூய ஸ்தேவான் பேராலயத்தில் நடைபெற்ற Luigi Paliq மற்றும் Gjon Gazulli அவர்களின் அருளாளர்பட்ட திருப்பலியின்போது ஆற்றிய மறையுரையில் இவ்வாறு கூறினார் புனிதர் பட்ட நிலைகளுக்குரிய திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் மர்செல்லோ செமராரோ.

அருளாளர்களாக உயர்த்தப்பட்ட மறைசாட்சிகளான லூயிஸ் பாலிக் மற்றும் க்ஜோன் காசுல்லி இருவரும் ஸ்குத்தாரி மறைமாவட்டத்தை சார்ந்தவர்கள் என்றும் "அவர்கள் உங்களை அவமதிப்பார்கள். உங்களைத் துன்புறுத்துவார்கள், பொய் சொல்லி, என் நிமித்தம் உங்களுக்கு எதிராக எல்லாவிதமான தீமைகளையும் சொல்வார்கள் என்ற இயேசுவின் வார்த்தைகளை தங்களது வாழ்வில் நிறையைப் பெற்றவர்கள் என்றும் கூறினார்.

அருளாளர்கள் இருவரும் மக்களுக்கு நன்மையைச் செய்தவர்கள், அவதூறு சாட்டப்பட்டு, பொய்களால் கண்டனம் செய்யப்பட்டார்கள் என்றும், அல்பேனிய இன மக்களுக்கு எதிராக அடக்குமுறைக் கொள்கையை எதிர்த்து போரிட்டபோது மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டவர்கள் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் செமராரோ.

தங்களை நிந்தித்து தூக்கில் ஏற்றிக் கொலை செய்தவர்களை "ஓ இயேசுவே, இது உமது அன்பிற்காக இருக்கட்டும்" என்று கூறி மன்னித்து உயிர் துறந்தவர்கள் இரு அருளாளர்கள் என்று கூறிய கர்தினால் செமராரோ அவர்கள், இயேசுவைப் போலவே உண்மையான சான்று வாழ்வு வாழ்ந்தவர்கள் அவர்கள் என்றும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 November 2024, 15:08