மதங்களிடையே கலந்துரையாடலை ஊக்குவித்த கர்தினால் மறைவு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
மதங்களிடையேயான கலந்துரையாடலுக்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் Miguel Ángel Ayuso Guixot அவர்கள் நவம்பர் 25, திங்களன்று இறைபதம் சேர்ந்தார்.
பிற மதங்களுடன் ஆன கலந்துரையாடல்களில் மிகவும் ஆர்வம் காட்டிவந்த கர்தினால் ஆயுசோ குய்க்ஸோ அவர்கள், இஸ்லாம் மற்றும் அரபு உலகு குறித்து ஆழ்ந்த அறிவுடையவராக செயல்பட்டதுடன், திருத்தந்தையின் ஏறக்குறைய அனைத்து திருப்பயணங்களிலும் உடன் சென்று வந்துள்ளார்.
1952ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி இஸ்பெயின் நாட்டின் Seville யில் பிறந்த கர்தினால் ஆயுசோ குய்க்ஸோ அவர்கள், கொம்போனி மறைப்பணியாளர் சபையில் இணைந்து குருவாகி, பின்னர் இஸ்லாம் மதம் குறித்து உரோம் நகரில் மேற்படிப்பு பயின்றார்.
2019ஆம் ஆண்டில் இவரை கர்தினாலாக உயர்த்தி மதங்களுடனான கலந்துரையாடலுக்கான திருப்பீடத்துறையின் தலைவராக நியமித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் திருப்பயணங்களில் உடன் அழைத்துச் சென்றார்.
இஸ்லாமியர்கள், இந்துக்கள், புத்த மதத்தினர் மற்றும் உலகெங்கிலுமுள்ள அனத்து மதங்களுடன் உரையாடல் நடத்துவதற்கு திருஅவைக்கு பெரும் ஊக்கமாக இருந்தவர் கர்தினால் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்