தேடுதல்

புனித பேதுரு பெருங்கோவில் புனிதக்கதவுக்குச் செல்லும் திருப்பயணிகள் புனித பேதுரு பெருங்கோவில் புனிதக்கதவுக்குச் செல்லும் திருப்பயணிகள்  (ANSA)

புனித பேதுரு பெருங்கோவில் புனிதக் கதவு வழியாக அரை இலட்சம் பேர்

இரண்டு வாரங்களில் 5 இலட்சத்து 45 ஆயிரத்து 532பேர் புனிதக் கதவு வழியாக கடந்து சென்றுள்ளதாக நற்செய்தி அறிவிப்புத் திருப்பீடத்துறையின் இணைத்தலைவர் பேராயர் Rino Fisichella அறிவித்தார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

டிசம்பர் மாதம் 24ஆம் தேதி திருத்தந்தையால் திறந்துவைக்கப்பட்ட வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் புனித கதவு வழியாக கடந்த இருவாரத்தில் 5 இலட்சம் பேர் கடந்து சென்றுள்ளதாக யூபிலி ஆண்டிற்கான அலுவலகம் தெரிவிக்கிறது.

இரண்டு வாரங்களில் 5 இலட்சத்து 45 ஆயிரத்து 532பேர் புனிதக் கதவு வழியாக கடந்து சென்றுள்ளதாக யூபிலி அலுவலத்தை தன் கீழ் கொண்டிருக்கும் நற்செய்தி அறிவிப்புத் திருப்பீடத்துறையின் இணைத்தலைவர் பேராயர் Rino Fisichella அறிவித்தார்.  

பெரிய அளவில் திருப்பயணிகள் ஆர்வம் காட்டி புனிதக் கதவுக்குள் நுழைவது, உரோம் நகரில் நிலவும் பாதுகாப்பையும் உணர்த்துவதாக உள்ளது என்ற பேராயர், வத்திக்கானின் பாதுகாப்புத்துறை, இத்தாலியக் காவல்துறை, உரோம் நிர்வாகம் ஆகியவைகளின் ஒத்துழைப்பையும் பாராட்டினார்.

தொடர்ந்து திருப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்ட பேராயர் Fisichella அவர்கள், ஜனவரி மாதம் 5ஆம் தேதி உரோம் நகரின் புனித பவுல் பெருங்கோவிலின் புனித கதவு திறக்கப்பட்டதிலிருந்து  உரோம் நகரின் அனைத்து நான்கு பெருங்கோவில்களின் புனிதக் கதவு வழியாகவும் திருப்பயணிகள் சென்று பலனடைந்து வருகின்றனர் என தெரிவித்தார்.

உரோம் நகரின் 4 பெருங்கோவில்களான புனித பேதுரு பேராலயம், புனித பவுல் பேராலயம், மேரி மேஜர் பேராலயம் மற்றும் புனித இலாத்ரன் பேராலயம் ஆகியவைகளில் யூபிலி ஆண்டை முன்னிட்டு புனிதக் கதவுகள் திறந்துவைக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 January 2025, 15:25