தேடுதல்

யமுனை நதி யமுனை நதி  

இனியது இயற்கை - ஆன்மாவைக் காப்பதுபோன்று ஆறுகளைக் காப்போம்

ஆறுகள் நம் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய முக்கியப் பொறுப்புகளைக் கொண்டுள்ளபோதிலும், அவற்றை நாம் முழுமையாகப் பயன்படுத்த முடியாத அளவிற்குச் சில காரணங்களும் உள்ளன.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மனிதர் தன் ஆன்மாவைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அனைத்துவிதமான ஆன்மிக முயற்சிகளையும் முன்னெடுப்பதுபோல, மனிதரின் உயிர்நாடியாக விளங்கும் ஆறுகளைப் பாதுகாத்துக்கொள்வதிலும் முயற்சிகளை எடுக்கவேண்டும். நமது இந்திய நாட்டில் 10,360 ஆறுகள், ஏறத்தாழ 1,869 கன கிலோமீட்டர் வேகத்தில் பாய்வதாகக் கணக்கெடுப்புகள் துல்லியமாகக் கூறுகின்றன. ஆனால், சில கட்டமைப்புக் காரணங்களால் அவ்வளவு நீரையும் நம்மால் சேமிக்க முடிவதில்லை. ஆனால், நமக்குத்  தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது, அவ்வாறுகள் நமக்குப் பயன்படக்கூடிய நீர் வளங்களாக இருக்கின்றன என்பதை நாம் மறுப்பதற்கில்லை. அதேவேளையில், இந்த ஆறுகளைக் கொண்டுதான் நாம் உயிர் வாழ முடியும் என்ற கட்டாய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆறுகள் நம் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய முக்கியப் பொறுப்புகளைக் கொண்டுள்ளன. இருந்தபோதிலும், அவற்றை நாம் முழுமையாகப் பயன்படுத்த முடியாத அளவிற்குச் சில காரணங்களும் உள்ளன. கங்கை, யமுனை மற்றும் பிரம்மபுத்திரா ஆகிய நதிகள், அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்களுக்குப் பெரும் நம்பிக்கையாக இருக்கின்றன. அதேவேளையில், அந்த நதிகளைச் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வதில் நாம் பெருமளவில் பின் தங்கியிருக்கிறோம். இந்த நதிகளில் மனிதக் கழிவுகளைக் கொட்டுவதும், தொழிற்சாலைகளின் கழிவுகளைக் கலப்பதும், அந்தத் தண்ணீரை நம்பி இருக்கும் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆகவே, அவசரத் தேவையாக இந்த நதிகளைச் சரியாகப்  பராமரித்தால்தான் அதனைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கைத் தரமும் மேம்படும். நமது நாடித்துடிப்பாய் நலம்பயக்கும் ஆறுகளைப் பராமரித்துப் பாதுகாப்போம்.     

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 March 2022, 14:20