இனியது இயற்கை - அனுமன் நதி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
அனுமன் நதி என்பது தென்காசியில் உற்பத்தியாகும் சிற்றாறு என்னும் ஆற்றின் துணை ஆறு ஆகும். அனுமன் ஆறு வழியாக தென்காசி நகராட்சியில் உள்ள 4046.94 எக்டேர்களுக்கு நேரடியாகவும், இதன் துணையாறான கருப்பாறு வழியாக 3844.59 எக்டேர்களுக்கு மறைமுகமாகவும் பாசன வசதி கிடைக்கிறது. இது வீரகேரளம்புதூர் என்னும் ஊரில் சிற்றாறுடன் இணைகிறது. சிற்றாறுக்கு மொத்தம் ஐந்து துணை ஆறுகளும், மூன்று இரண்டாம் நிலை துணையாறுகளும், 14 அணைக்கட்டுகளும் உள்ளன.
இராமாயண காலத்தின்போது இராமர், இலட்சுமணருடன் வந்த அவர்களின் படையின் தாகத்தைத் தணிக்க அனுமான் ஒரு பாறையை உடைத்தார். அதில் இருந்து விண்கங்கை கொட்டியது. அதுவே நாளடைவில் ஆறாக மாறி அனுமன் ஆறு எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர். (நன்றி : விக்கிபீடியா)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்