தேடுதல்

உக்ரைன் போரில் இறந்தவர்கள் உக்ரைன் போரில் இறந்தவர்கள் 

உக்ரைன், இரஷ்யத் தலைவர்கள் ஓர் உடன்பாட்டை எட்டவேண்டும்

அணு சக்திகள் மற்றும், புதிய இராணுவ தொழில்நுட்பங்கள், விதிமுறைகளுக்குட்பட்டு செயல்படாதபோது, அவை மனிதகுலத்திற்குப் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் - Kissinger

செல்வராஜ் சூசைமாணிக்ககம் - வத்திக்கான்

எளிதில் சமாளிக்க முடியாத கொந்தளிப்புகளையும் பதட்டங்களையும் உருவாக்குவதற்குமுன்பு, உக்ரைன், இரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அனைத்துலக நிலைத்தன்மைக்கு முக்கியமானது என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் முன்னாள் வெளியுறவுத் துறை செயலர் கூறியுள்ளார்.

மே 23, திங்களன்று, சுவிட்சர்லாந்தின் Davosல் உள்ள உலகப் பொருளாதார மாநாட்டில் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை  செயலர் Henry Kissinger , உக்ரைன் மீதான இரஷ்யாவின்  தாக்குதல்கள்  பற்றிய தனது கவலைகளைப் பகிர்ந்து கொண்டதுடன், இந்த மோதல் உலகின் போக்கையே மாற்றக்கூடும் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

உலகப் பொருளாதார மாநாட்டின் நிறுவுநரும் நிர்வாக இயக்குநருமான Klaus Schwab அவர்களுடன், 89 வயது நிறைந்த Kissinger நடத்திய உரையாடலின்போது, இந்நிலை நீடிக்குமேயானால், இரஷ்யா ஐரோப்பாவிலிருந்து தன்னை முழுமையாக விலக்கிக்கொண்டு வேறு இடத்தில் நிரந்தரக் கூட்டணியை நாடவேண்டிய நிலை ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளார்.

தற்போது நிலவும் போர்ச் சூழலால் அமெரிக்க ஐக்கிய நாடும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் கொண்டுள்ள உறவை இழந்துவிடக்கூடாது என்று தனது கரிசனையை வெளிப்படுத்திய Kissinger, பிப்ரவரி 24 அன்று இரஷ்யா தனது ஆக்ரமிப்பைத் தொடங்கியபோது இருந்த நிலைமையை மீட்டெடுக்கும் ஓர் ஒப்பந்தத்திற்கு உக்ரைன் உடன்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 May 2022, 15:30