தேடுதல்

குருதோங்மார் ஏரி குருதோங்மார் ஏரி 

இனியது இயற்கை : குருதோங்மார் ஏரி

திபெத்திய புத்த மதத்தைத் தோற்றுவித்த குரு பத்மசாம்பவர் என்பவர் இங்கு வந்து சென்றதால் இந்த ஏரிக்கு குருதோங்மார் என்று பெயரிடப்பட்டது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்   

குருதோங்மார் ஏரி அல்லது குருதோக்மார் ஏரி என்பது, இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஒரு புனித ஏரியாகும். இது உலகின் உயரமான இடத்தில் அமைந்துள்ள ஏரிகளுள் ஒன்று. இது கடல் மட்டத்தில் இருந்து 17,100 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது சிக்கிம் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ளது. தீட்தா ஆற்றின் ஆதாரங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது குருதோங்மார் ஏரி.

இந்த ஏரியின் மேட்டு நிலத்தின் பெரும்பகுதியில் இந்திய இராணுவம் தனது முகாம்களை அமைத்துள்ளதால் இந்தியர்களுக்கு மட்டுமே இந்த ஏரிக்குச் செல்ல அனுமதி உண்டு. இது அதிக உயரத்தில் அமைந்திருப்பதால் இங்கு ஆக்சிசன் குறைவாக இருக்கும். இதனால் சில சுற்றுலாப் பயணிகளுக்கு மூச்சு விடுவது கடினமாக இருக்கலாம்.

எட்டாம் நூற்றாண்டில் திபெத்திய புத்த மதத்தைத் தோற்றுவித்த குரு பத்மசாம்பவர் என்பவர் இவ்விடத்திற்கு வந்து சென்றதால் இந்த ஏரிக்கு குருதோங்மார் என்று பெயரிடப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 May 2022, 10:59