தேடுதல்

மிச்சிகன் ஏரி மிச்சிகன் ஏரி 

இனியது இயற்கை : மிச்சிகன் ஏரி

உலகளவில் ஐந்தாவது மிகப்பெரிய மிச்சிகன் ஏரி, 494 கிலோ மீட்டர் நீளமும் 190 கிலோ மீட்டர் அகலமும் உடையதாக 57,750 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் எல்லைகளுக்குள்ளே முழுவதுமாக அமைந்துள்ள ஒரே அமெரிக்கப் பேரேரி மிச்சிகன் ஏரியாகும்; மற்ற நான்கு பேரேரிகளும் கனடாவுடன் பகிரப்பட்டுள்ளன. இது அமெரிக்க ஐக்கிய நாட்டின் மத்திய மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள பேரேரிகளில் இது கொள்ளளவின்படி இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகும்.  மேற்பரப்பளவின்படி மூன்றாவது பெரியதாகும்; சுப்பீரியர் ஏரியும் இயூரோன் ஏரியும் இதைவிடப் பெரியன.

மிச்சிகன் ஏரியின் கரைப்பகுதிகளை மேற்கிலிருந்து கிழக்காக விஸ்கொன்சின், இலினொய், இந்தியானா, மிச்சிகன் மாநிலங்கள் பகிர்ந்து கொள்கின்றன. "மிச்சிகன்" என்ற சொல் துவக்கத்தில் ஏரியைக் குறிப்பிடுவதாகவே இருந்தது; இது உள்ளூர் ஒஜிப்வெ மொழியில், பெரும் நீர் என்ற பொருள்தரும் மிச்சி காமி என்ற சொல்லிலிருந்து உருவாகியிருக்கலாம் என்கின்றனர்.

உலகளவில் ஐந்தாவது மிகப்பெரிய மிச்சிகன் ஏரி, 494 கிலோ மீட்டர் நீளமும் 190 கிலோ மீட்டர் அகலமும் உடையதாக 57,750 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 2,640 கிலோ மீட்டர் நீளமான ஏரிக்கரையையும் கொண்டிருக்கிறது இது. அதன் கடற்கரையில்  அமைந்துள்ள சிகாகோ, மில்வாக்கி மற்றும் மஸ்கெகான் ஆகியவை மிக முக்கிய நகரங்களாகும். மிச்சிகன் ஏரியின் கரையோரமாக 1 கோடியே 20 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். இந்த ஏரி 1634ல் பிரெஞ்சு ஆய்வாளர் ஜீன் நிக்கோலட் என்பவரால் வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 June 2022, 12:38