இராஜஸ்தான் மாநிலத்தின் Pichola ஏரி இராஜஸ்தான் மாநிலத்தின் Pichola ஏரி 

இனியது இயற்கை: இராஜஸ்தான் மாநிலத்தின் Pichola ஏரி

உதயப்பூர் நகரின் மையத்தில் அமைந்துள்ள பிகோலா ஏரி, இராஜஸ்தானை மகாராஜா Lakha ஆட்சிபுரிந்துவந்த காலத்தில், 1,362ம் ஆண்டில் அமைக்கப்பட்டது

மேரி தெரேசா: வத்திக்கான்

இராஜஸ்தான், இந்தியாவின் கடந்தகால மகிமைமிகு மகாரானாக்கள் (பேரரசர்களின்) வரலாறைக் கொண்ட ஒரு பகுதியாகும். இந்தியாவின் மிகப் பெரிய தார் பாலைவனத்தின் பெரும்பகுதி இராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தபோதிலும், அங்கு சில அழகான, இயற்கை, மற்றும் செயற்கை ஏரிகளும் உள்ளன. செயற்கை ஏரிகள், அம்மாநிலத்தின் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்குவதற்காக பழங்காலத்தில் அரசர்களால் உருவாக்கப்பட்டவையாகும். உதயப்பூரிலுள்ள பிக்கோலா Pichola, Fateh Sagar, மற்றும், Jaisamand ஏரிகள், புஷ்காரிலுள்ள  Pushkar ஏரி, ஜோத்பூரிலுள்ள Balsamand ஏரி, ஆஜ்மீரிலுள்ள Ana Sagar ஏரி, உலகின் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றான ஆரவல்லியின் Mount Abuவிலுள்ள Nakki ஏரி, Jaisalmerலுள்ள Gadisar ஏரி போன்றவை முக்கியமான ஏரிகளாகும்.

Pichola ஏரி, உதய்பூர்

உதயப்பூர் நகரின் மையத்தில் அமைந்துள்ள பிகோலா ஏரி, அந்நகரிலுள்ள மிகப் பழமையான மற்றும், மிகப் பெரிய ஏரிகளுள் ஒன்றாகும். இந்த ஏரி, இராஜஸ்தானை மகாராஜா Lakha ஆட்சிபுரிந்துவந்த காலத்தில், 1,362ம் ஆண்டில் Pichhu Banjara என்பவரால் அமைக்கப்பட்டது. இது, மூன்று மைல் நீளத்தையும், இரண்டு மைல் அகலத்தையும், முப்பது அடி ஆழத்தையும் கொண்டது. Maharana Udai Singh அவர்கள், இந்த ஏரியின் அழகில் மயங்கி, இதனை விரிவுபடுத்தி, அதன் கரையில் நீர்த்தேக்கம் ஒன்றையும் கட்டினார். இந்த ஏரியின் கரையிலுள்ள அரண்மனைக் கட்டடங்கள், பசுமையான குன்றுகள் போன்றவை பார்ப்பவர் கண்களுக்கு விருந்தாக உள்ளன. இந்த ஏரியின் வடகிழக்கு மூலையில் மோகன் மந்திர் அமைந்துள்ளது. Jag தீவில் Jag Mandirம் உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 June 2022, 14:18