தேடுதல்

 சொமாலியாவின் Baidoa என்னுமிடத்தில் குடிதண்ணீர் பெற வரிசையில் மக்கள் சொமாலியாவின் Baidoa என்னுமிடத்தில் குடிதண்ணீர் பெற வரிசையில் மக்கள்  

உணவு நெருக்கடியைத் தவிர்க்கும் முயற்சிகளை ஊக்குவிக்க்கும் ஐநா

பாதிக்கப்படும் மக்களின் அவசர உதவிக்கு அதிக நிதியுதவி வழங்குமாறு அனைத்துலகச் சமுதாயங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது UNICEF நிறுவனம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"உக்ரைன் போரிலிருந்து உலகம் தனது பார்வையை விரிவுபடுத்த வேண்டும் என்றும் சொமாலியா வறுமையில் உழல்வதைத் தடுப்பதற்கு அவசரமாக செயல்பட வேண்டும் என்றும், ஜூன் 7, இச்செவ்வாயன்று, கூறியுள்ளது UNICEF நிறுவனம்.

உக்ரைனில் நடக்கும் போரை, ஆப்பிரிக்காவின் முக்கியப் பகுதியில் உள்ள குழந்தைகளின் உயிரை அதிக ஆபத்திற்குக் கொண்டுசெல்லும் ஒரு முக்கிய காரணியாக சுட்டிக் காட்டினார் கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கான UNICEFன்  துணை இயக்குனர் Rania Dagash,

மேலும், இரஷ்யா மற்றும் உக்ரைனிலிருந்து சொமாலியா மட்டுமே அதன் 92 விழுக்காடு கோதுமையை இறக்குமதி செய்துவந்த நிலையில், இப்போது அதற்கான வழிகளும் அடைக்கப்பட்டுள்ளன என்று கவலை தெரிவித்துள்ளார் Dagash.  

உண்மையில், கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை 5 மாத இடைவெளியில் 15 விழுக்காட்டிற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ள Dagash, இந்நிலையில் எத்தியோப்பியா, கென்யா மற்றும் சொமாலியா முழுவதுமுள்ள 17 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.  

இந்த ஆண்டு உதவிகள் புரிய தேவைப்படும் மொத்த அளவில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நிறுவனங்களிடம் உள்ளது என்றும், இன்னும் சில வாரங்களில் ஜெர்மனியில் சந்திக்கப்போகும் G7 தலைமையிலான பன்னட்டுச் சமூகம் உயிர்களைக் காப்பாற்ற கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் விண்ணப்பித்துள்ளார் Dagash.

சொமாலியாவில் மட்டும் 38,6000 குழந்தைள் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிர்காக்கும் தீவிர சிகிச்சைக்கு உள்ளாகியுள்ளனர் என்றும்,  இவ்வெண்ணிக்கை  2011ல் சொமாலியாவில் 25,0000 குழந்தைகளின் உயிர்களைப் பஞ்சம் கொன்றதை விட அதிகமான எண்ணிக்கையாகும் என்றும் ஐ.நா.வின் புள்ளிவிபரம் எடுத்துக்காட்டுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 June 2022, 15:32