தேடுதல்

தூசி படர்ந்துள்ள ஈராக்கின் தலைநகர் பாக்தாத் தூசி படர்ந்துள்ள ஈராக்கின் தலைநகர் பாக்தாத்  

இனியது இயற்கை – இயற்கையின் வலியை இதயத்தில் உணர்வோம்!

ஒரு மரம் வெட்டும்போது, அதற்கு ஈடாக 10 மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். இதுவே, இந்த இயற்கைமீது நாம் கொண்டிருக்கும் உண்மையான அக்கறை.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

என்னப்பா இது.... இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் சாலைகள் எல்லாம் இவ்வளவு மோசமாக இருக்கிறேதே! இன்னும் பல குக்கிராமங்களுக்கு சாலை வசதியே இல்லாமல் இருக்கே!. அதுமட்டுமா? மின்சார வசதி இல்லை... போக்குவரத்து வசதி இல்லை.., தொலைத்தொடர்பு வசதி இல்லை.. என்று நமது தேவைகள் குறித்து நாம் குறிகூறிக்கொண்டிருக்கின்றோம். வங்கியில் பல ஆண்டுகளாகச் சிறுகச் சிறுக சேமித்து வைத்திருந்த அவ்வளவு பணத்தையும் எடுத்து ஒரே வாரத்திற்குள் செலவு செய்தால் நம் மனதில் எவ்வளவு வலிகள் ஏற்படுமோ அவ்வளவு வலிகள் இந்த இயற்கையை அழிப்பதால் ஏற்படவேண்டும். வங்கியில் பணத்தை சேமித்து வைக்காமல் எப்படி செலவு செய்யக்கூடாதோ, அவ்வாறே, ஒருபுறம் மரங்களை வளர்க்காமல் மறுபுறம் மரங்களை கபளீகரம் செய்யக்கூடாது.

கடந்த 2014 முதல் 2018 வரையிலான ஆண்டுகளில் சாலைகள், நெடுஞ்சாலைகள், சுரங்கங்கள், குவாரிகள், நீர் மின்சக்தி நிலையங்கள், இரயில் நிலையங்கள், தொலைத்தொடர்பு கம்பிகள், கேபிள்கள், குழாய்கள், கட்டடங்கள், தொழிற்சாலைகள், எண்ணெய் எடுப்பதற்கான ஆய்வு எனப் பல்வேறு துறைகளுக்கென 794 திட்டங்கள் வழியாகக் காடுகளை அழிக்கத் திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டன. இதில் 519 திட்டங்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தது என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 August 2022, 13:54