அமெரிக்க தூதுவர் Cindy McCain,    அமெரிக்க தூதுவர் Cindy McCain,  

இலங்கை மக்களுக்கு உதவும் அமெரிக்க FAO அமைப்பு.

இலங்கை மக்களுக்கு விதைகளை மட்டுமல்ல அவர்கள் கடந்த காலங்களில் இழந்ததை மீட்டெடுக்கும் வகையில் தொழிற்கருவிகளையும் அளித்து இருக்கின்றோம். - அமெரிக்க தூதுவர் Cindy McCain,

மெரினா ராஜ் - வத்திக்கான் 

இலங்கை மக்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவி வருகின்றது என்றும், இலங்கை மக்களின் தேவைகள், அமெரிக்க நிதி உதவி பெறும் இலங்கை தீவுப் பகுதிகளின் நிலவரம், மற்றும் இலங்கை மக்களின் உணவு பாதுகாப்பு போன்றவை குறித்து தொடர்ந்து FAO அமைப்பு  கண்காணித்து வருகின்றது என்று தெரிவித்துள்ளார் FAO என்னும் உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்துக்கான அமெரிக்க தூதுவர் Cindy McCain,   

இலங்கையின் தற்போதைய அரசுத்தலைவர் ரணில் விக்ரமசிங் அவர்களை சந்தித்து உரையாடிய   ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் வேளாண் நிறுவனத்திற்கான அமெரிக்க தூதுவர் Cindy McCain அவர்கள், அமெரிக்கா, இலங்கை மக்களுக்கு வழங்கி வருகின்ற உணவு உதவித் திட்டங்களைப் பார்வையிடவும், இலங்கை மற்றும் அமெரிக்காவின் நட்புறவை வலுப்படுத்தவும் இலங்கைக்கு மேற்கொண்டுள்ள  நான்கு நாள் பயணத்தின் போது இவ்வாறு கூறியுள்ளார்.

அமெரிக்க நிதி உதவி பெறும்  பள்ளிகளைப் பார்வையிட்ட அவர், இலங்கை மக்களுக்கு விதைகளை மட்டுமல்ல அவர்கள் கடந்த காலங்களில் இழந்ததை மீட்டெடுக்கும் வகையில் தொழிற்கருவிகளையும் அளித்து இருக்கின்றோம் என்றும் கூறியுள்ளார்.  

இலங்கை தூதுவர் Julie Chung அவர்களுடன் இணைந்து, அமெரிக்க நிதி  உதவி பெறும் பள்ளிகள், விவசாய நிலங்கள், சமூகக் குழுக்களின் செயல்பாடுகள் போன்றவற்றையும், அமெரிக்க அரசினால் பயன்பெறுபவர்களையும் சந்தித்த இவரின் செயல், இலங்கையின் பொருளாதர நெருக்கடி சூழ்நிலையில் மிகச்சிறந்த ஆறுதலாக இருக்கின்றது என்று இலங்கையின் பொருளாதார ஆய்வாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கருதுகின்றனர்.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் இலங்கைத் தீவின் மீது தொடர்ந்து தங்கள் ஆதரவை தெரிவிக்கின்றன என்பதை வெளிப்படுத்தும் விதமாக,  இலங்கைக் கடற்படைக்கு ஒரு கப்பலை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.(ASIA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 September 2022, 15:08